search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிலைகளை கரைக்க ஏற்பாடு"

    • பொதுப்பணிதுறையினர் ஆற்றின் நீர்வரத்தை கண்காணிக்க உத்தரவு
    • தடுப்புகள் அமைத்து பாதுகாப்பை உறுதிப்படுத்த அறிவுறுத்தல்

    மேட்டுப்பாளையம்,

    கோவை மேட்டுப்பா ளையம் பகுதியில் விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு கோட்ட அளவில் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள ஏதுவாக, அனைத்து துறை அதிகாரிகள் உடனான ஆலோசனை கூட்டம், வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெ ற்றது.

    கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தன் தலைமைதாங்கினார். தாசில்தார் வி. பி.சந்திரன் வரவேற்றார்.

    வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தன் பேசும்போது, விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது போலீசார் சாலையில் பாதுகாப்பு பணிகளை செய்ய வேண்டும், பவானி ஆற்றில் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பாக சிலைகளைக் கரைக்க ஏற்பாடு செய்ய வேண்டும், ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும், பொதுப்பணி துறையினர் பவானி ஆற்றின் நீர்வரத்தை கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.ஆலோசனை கூட்டத்தில் மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர் அமுதா, காரமடை நகராட்சி கமிஷனர் மனோகரன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நவநீதகிருஷ்ணன் (மேட்டுப்பாளையம்), ராஜசேகர் (காரமடை), சித்ரா (சிறுமுகை), மின்வாரிய உதவி கோட்ட பொறியாளர் சுரேஷ்குமார், உதவி பொறியாளர்கள் தினேசன், சுரேஷ்குமார்,

    நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் பிரசன்னா, சாலை ஆய்வாளர் ரமேஷ்குமார், சிறுமுகை பேரூராட்சி தலைமை எழுத்தர் சுந்தர்ராஜன், மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அதிகாரி சிவக்குமார், தீயணைப்பு நிலைய அதிகாரி பாலசுந்தரம்,

    வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ராமமூர்த்தி, மேட்டுப்பாளையம் வருவாய் ஆய்வாளர்கள் வெண்ணிலா, காரமடை ரேணுகாதேவி, மேட்டுப்பாளையம் நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் பாஸ்கரன், மகாராஜன், உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். முடிவில் நலிந்தோர் நலத்திட்ட தாசில்தார் ரங்கராஜன் நன்றி கூறினார்.

    ×