search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுநீரக தானம்"

    • படிப்படியாக மாணவனின் நிலைமை மோசமாகி 4ம் நிலை சிறுநீரக செயலிழப்புக்கு வழி வகுத்தது.
    • அந்த ஆசிரியருக்கு நாங்கள் கடன்பட்டிருக்கிறோம் என அவர்கள் உணர்ச்சி பொங்க தெரிவித்தனர்.

    அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் 15-வயதான ரோமன் மெக்கோர்மிக் என்ற மாணவன், ப்ரான்கியோ ஓடோரீனல் சிண்ட்ரோம் (branchiootorenal syndrome) எனப்படும் மரபணு கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தான். இதனால் அவன் திசுக்களின் வளர்ச்சி மற்றும் காது, சிறுநீரகம் போன்ற உடலுறுப்புகளில் பாதிப்புகள் ஏற்பட்டன. அவனால் பிற சிறுவர்களை போன்று உண்ணவோ, விளையாடவோ முடியாமல் இருந்து வந்தது. படிப்படியாக அவனது நிலைமை மோசமாகி  சிறுநீரகம் செயலிழந்தது.

    சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு கொடையாளி கிடைக்கும் வரை அவனுக்கு டயாலிசிஸ் எனப்படும் சிறுநீரக சுத்திகரிப்பு தொடர்ந்து செய்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. இரண்டு வருடங்களாக கொடையாளியை அவன் குடும்பத்தினர் தேடி வந்தும் அவனுக்கு பொருத்தமான சிறுநீரக கொடையாளி கிடைக்கவில்லை.

    இந்நிலையில் டொலேடோ நகரத்திலுள்ள அச்சிறுவன் படிக்கும் விட்மர் உயர்நிலை பள்ளியின் கணித ஆசிரியர் எட்டி மெக்கார்த்தி அவனுக்கு சிறுநீரகம் வழங்க முன்வந்துள்ளார். அவரது சிறுநீரகம் அந்த சிறுவனுக்கு பொருந்துமா என்பதை அறிந்து கொள்ள அவர் தானாக முன்வந்து பரிசோதனை செய்து கொண்டுள்ளார். பிறகு அவர் தகுதியானவர் என்பதை தெரிந்து கொண்டு அறுவை சிகிச்சைக்கான நாள் குறிக்கப்பட்டவுடன் அந்த சிறுவனின் குடும்பத்தாரிடம் அவர் செய்தியை தெரிவித்தார்.

    "என் வகுப்பில் படிக்கும் நல்ல மாணவன் அவன். அவனுக்கு உதவலாம் என முயற்சி செய்தேன்" என மெக்கார்த்தி கூறினார்.

    இதனையறிந்த மாணவனும் அவன் குடும்பத்தாரும் மிகுந்த மகிழ்ச்சியும் ஆச்சரியமும் அடைந்துள்ளனர். அந்த ஆசிரியருக்கு நாங்கள் கடன்பட்டிருக்கிறோம் என அவர்கள் உணர்ச்சி பொங்க தெரிவித்தனர்.

    டொலேடோவிலிருந்து சுமார் 1 மணி நேர பயண தூரத்தில் உள்ள ஆன் ஆர்பர் பகுதியின் மிசிகன் பல்கலைகழக மருத்துவமனையில் அந்த மாணவனுக்கு நாளை சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெறவிருக்கிறது.

    • போலி இடைத்தரகர்கள் பல அப்பாவிகளை தொடர்பு கொண்டு பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.
    • உறுப்பு கடத்தல் மற்றும் மோசடிகளை தடுக்க தெளிவான விதிகளை வகுத்திருப்பதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது.

    ஒவ்வொரு ஆண்டும், கிட்டத்தட்ட 10 லட்சம் இந்தியர்கள் நாட்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் 2 லட்சம் பேர் இறுதி நிலை சிறுநீரக செயலிழப்பை அடைகிறார்கள்.

    சிலருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையினால் பயன் கிடைப்பதால் சிறுநீரக தானம் அளிக்க முன்வருவோருக்கு அதிக தேவை உருவாகியிருக்கிறது. இதனால் தானம் அளிக்க முன்வருவோரையும், குடும்ப கஷ்டத்திற்காக சிறுநீரகத்தை விற்க விரும்புவோரையும் குறி வைத்து பல மோசடி வேலைகள் நடக்கின்றன.

    வறுமையில் வாடும் ஒரு பெண், தனது சிறுநீரகத்தை விற்க முன் வந்திருக்கிறார். அவரின் இணையவழி தேடலில் ஒரு முகநூல் பக்கம் அவருக்கு பதிலளித்து, ரூ.10 லட்சத்திற்கு அதனை வாங்க விரும்புவதாகவும், ஆனால் முன்பணமாக ரூ.8 ஆயிரம் அவர் செலுத்த வேண்டும் என பதிலளித்திருக்கிறது. ஒரு மருத்துவமனையின் பெயரையும் கொடுத்து, பணத்தை இணையவழியில் செலுத்தி விட சொல்லி அவசரப்படுத்தியிருக்கிறது.

    பணம் செலுத்தும் முன், கொடுக்கப்பட்ட எண்ணை அவர் தொடர்பு கொண்டார். மோகன் அறக்கட்டளை எனும் லாபநோக்கமற்ற அந்த அமைப்பின் எண்ணை தொடர்பு கொண்டபோது, அவர்கள் பணம் எதுவும் வழங்குவதில்லை என தெரிவித்திருக்கின்றனர்.

    அதிர்ஷ்டவசமாக அப்பெண்மணி தான் ஏமாற்றப்படுவதிலிருந்து தப்பித்தார். ஆனால், அவரை போன்ற ஆயிரக்கணக்கானோர் இவற்றை நம்பி பணத்தை இழந்திருக்கின்றனர். இத்தகைய மோசடிகள் பரவி வருகிறது என மோகன் அறக்கட்டளை தெரிவிக்கிறது.

    பிரபலமான மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளின் பெயர்களை போலி இடைத்தரகர்கள் பயன்படுத்தி பல அப்பாவிகளை தொடர்பு கொண்டு பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.

    நலிவடைந்து வரும் பொருளாதார சூழ்நிலையில், மக்களில் பெரும்பானோர் தங்கள் வேலைகளை இழந்து, வருமானம் குறைந்ததால், பலர் தங்கள் உறுப்புகளை விற்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.

    சிறுநீரக பரிமாற்றம் உண்மையில் நடைபெறுகிறதா, இல்லையா? என்பது தெளிவாகத் தெரியவில்லை.

    ஆனால், அவர்களின் இணையவழி மற்றும் முகநூல் தேடலின் தகவல் பரிமாற்றத்தில் முதலில் கட்ட வேண்டிய தொகை என கேட்பதை பலர் மிகவும் சிரமப்பட்டு கட்டி விடுகின்றனர். ஏற்கெனவே பொருளாதார சிக்கலில் உள்ள அவர்கள், பணத்தை இழந்து, மேலும் கடனில் விழுகின்றனர்.

    இது குறித்து முகநூல் தளம் நடத்தும் மெட்டா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், "உறுப்பு கடத்தல் மற்றும் மோசடிகள் உள்ளிட்ட மனித சுரண்டலுக்கு தாங்கள் எதிரானவர்கள். இதற்காக தெளிவான விதிகளை வகுத்திருக்கிறோம். மோசடி செய்பவர்கள் மிகவும் அதிநவீனமாக வளர்வதால், முதலீடுகளினாலோ, தொழில்நுட்பங்களினாலோ மட்டும் முகநூல் போன்ற பெரும் தளங்களில் நடைபெறும் மோசடியை 100% தடுக்க முடியாது," என்று தெரிவித்திருக்கிறார்.

    பணம் கட்டி ஏமாந்தவர்கள் புகாரளிக்க முன்வராததால் காவல்துறையால் இதில் எதுவும் செய்யவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன.

    ×