search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சத்துமிக்க பழங்கள்"

    • தர்பூசணி, முலாம்பழங்களை வாங்க மக்கள் ஆர்வம்
    • மொத்த மார்க்கெட்டுகளில் அதன் விலை சற்று குறைந்து காணப்பட்டது.

    கோவை,

    கோடை காலத்தில் உடலில் இருந்து வெளி யேறும் வியர்வையால் ஏற்படும் பாதிப்பை ஈடு செய்ய நீர்ச்சத்து நிறைந்த ஆகாரங்களை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டியது அவசியமானது. உடலில் நீர்ச்சத்தின் அளவை பராமரிக்கா விட்டால் தலைவலி, பசியின்மை, சரும பாதிப்பு, சோர்வு, தசை பிடிப்பு, ரத்த அழுத்த குறைவு, இதய துடிப்பு அதிகரிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

    சிலவகை பழங்கள், காய்கறிகள், தானியங்கள் இயற்கையாகவே நீர்ச்சத்தை அதிகம் கொண்டிருக்கின்றன. அவைகளுள் ஏதாவது ஒன்றையாவது தினமும் தவறாமல் சாப்பிட வேண்டும். 80 சதவீதத்துக்கும் மேலாக நீர்ச்சத்தை மட்டுமே உள்ளடக்கிய பழங்களும் இருக்கின்றன. பிளம்ஸ் பழம் 85 சதவீதம் நீர்ச்சத்து கொண்டது. வியர்வையால் ஏற்படும் நீர் இழப்பை ஈடு செய்யும் வல்லமை கொண்டது. ஆப்பிள் பழத்தில் 86 சதவீதம் நீர் சத்து இருக்கிறது.

    சோர்வாக இருப்பதாக உணர்ந்தால் ஆப்பிள் பழம் சாப்பிடுவது உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும்.

    அன்னாசி, ஆரஞ்சு பழங்கள் 87 சதவீதம் நீர் சத்து கொண்டவை. முலாம் பழம் 90 சதவீதம் நீர்சத்து கொண்டது. இது கோடை வெப்பத்தை விரட்டி அடித்து உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும் தன்மை கொண்டது. ஸ்டாபெர்ரி பழங்கள் 92 சதவீதம் நீர் சத்து கொண்டவை. தர்பூசணியில் 92 சதவீதம் நீர் சத்து உள்ளது.

    கோவையில் தற்போது வெயில் சுட்டெரிப்பதால் நீர்ச்சத்து மிக்க பழங்கள் விற்பனை அதிகரித்துள்ளது. குறிப்பாக தர்பூசணி, முலாம் பழம், கிர்ணிப்பழம், சாத்துக்குடி பழங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. இதற்காக உள்ளூரில் இருந்து மட்டுமல்லாமல் ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் பழங்கள் கொண்டு வரப்பட்டு கோவை மார்க்கெட்டுகளில் குவித்து வைக்கப்பட்டு உள்ளது. விற்பனை அதிகரிப்பால் பழங்களின் விலையும் அதிகரித்து காணப்படுகிறது.

    தியாகி குமரன் மார்க்கெட்டில் முலாம் ஒரு கிலோ ரூ.40 வரை விற்றது. மொத்த மார்க்கெட்டுகளில் அதன் விலை சற்று குறைந்து காணப்பட்டது.

    இதேபோல ஆப்பிள் ஒரு கிலோ 100-ல் இருந்து 160 -க்கும், சாத்துக்குடி 60-ல் இருந்து 70-க்கும், கருப்பு திராட்சை 50-ல் இருந்து 80-க்கும், வெள்ளை திராட்சை 50 முதல் 100க்கும், மாதுளை ஒரு கிலோ 150 முதல் 200க்கு, கொய்யா 60 லிருந்து 70-க்கும், எலுமிச்சை ஒரு கிலோ 80-ல் இருந்து 120-க்கும், விற்பனை செய்யப்படுகிறது. மற்ற பழங்கள் முலாம்பழம் ஒரு கிலோ ரூ.40, அன்னாசி ரூ.60, ஆரஞ்சு ரூ.80, மாம்பழம் செந்தூரம் ரூ.120, பங்கன பள்ளி ரூ.150, சப்போட்டா ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது .எலுமிச்சை பழம் விற்பனையும் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். 

    ×