search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சகாயம்"

    • தமிழுக்கு முன்னுரிமை கொடுத்து வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
    • தமிழ் வழியில் பயின்றவர்களை புறக்கணிப்பது ஏற்புடையது அல்ல.

    திருமங்கலம்:

    மதுரை திருமங்கலத்தில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் கலந்து கொண்டு பேசியதாவது:-

    நான் மதுரை மாவட்ட கலெக்டராக பணியாற்றிய போது மேலூர் அருகே உள்ள கிரானைட் மலையை உடைத்து தமிழக அரசுக்கு ரூ.14 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுத்தியதை கண்டுபிடித்தேன். இதற்காக என்னை சென்னைக்கு அழைத்தார்கள். அங்கு எனது பணியை தலைமை செயலர் உள்பட அனைவரும் பாராட்டினார்கள். தொடர்ந்து சென்னையில் இருந்து மதுரைக்கு புறப்பட்டேன்.

    மதுரை விமான நிலையத்தில் இறங்குவதற்கு முன்பே என்னை கலெக்டர் பதவியில் இருந்து மாற்றியதாக தகவல் கிடைத்தது. இதுகுறித்து யோசித்தபோது நேர்மையாக இருந்ததால் பதவி பறிபோய் விட்டதாக நினைத்தேன். 200 கோடி ஆண்டு பழமை வாய்ந்த கிரானைட் மலையை 20 ஆண்டுகளில் உடைத்து எறிந்துவிட்டனர்.

    அதை தடுத்து நிறுத்தியவன் நான், என் சமூகம் என்னை உருவாக்கியிருக்கிறது. அவர்களுக்கு நான் திருப்பி கொடுக்க வேண்டும் என்பதால்தான் நேர்மையாக செயல்பட்டேன். இன்றைக்கு அரசு தேர்வில் வெற்றி பெற்று அதிகாரத்தை பெறுபவர்கள் நேர்மையாக பணியாற்றி ஏழை, எளிய மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும்.

    ஏழை மாணவர்கள் தான் தமிழ் வழியில் பயின்று வருகிறார்கள். எனவே தமிழுக்கு முன்னுரிமை கொடுத்து வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். தமிழ் வழியில் பயின்றவர்களை புறக்கணிப்பது ஏற்புடையது அல்ல.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×