search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோஷ்டியினர் மோதல்"

    • கடலூர் அருகே டி. புதுப்பாளையம் சேர்ந்தவர் நேதாஜி. இவரது தம்பி அபிஷேக்.
    • நேதாஜி, கோபிநாத் ஆகிய 2 பேரும் அதே பகுதியில் பெட்ரோல் போடுவதற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே டி. புதுப்பாளையம் சேர்ந்தவர் நேதாஜி. இவரது தம்பி அபிஷேக். அதே பகுதியை சேர்ந்த நண்பர் கோபிநாத் தம்பி கோகுல் என்பவரும் பஸ்சில் சென்று புதுப்பாளை யம் பகுதியில் இறங்கினர். அப்போது பஸ்சில் வந்த 2 பேருக்கும், அதே பகுதி யை சேர்ந்த தமிழ்ச்செல்வன், அருள் ஆகியோருக்கும் திடீரென்று வாய் தகராறு ஏற்பட்டு தாக்கி கொண்டனர். உடனே அந்த வழியாக வந்தவர்கள் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

    சம்பவத்தன்று நேதாஜி, கோபிநாத் ஆகிய 2 பேரும் அதே பகுதியில் பெட்ரோல் போடுவதற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட4 பேர் திடீ ரென்று 2 பேரை வழி மறித்து தகராறில் ஈடுபட்டு கத்தியால் தாக்கி அடித்து கொலை மிரட்டல் விடுத்தனர். அதோடு வீட்டின் எதிரில் தமிழ்ச்செல்வன் மற்றும் அருளை, நேதாஜி தரப்பினர் தாக்கி நாற்காலியை உடைத்த தாக கூறப்படுகிறது. இந்த கோஷ்டி தகராறில் நேதாஜி, கோபிநாதன், தமிழ்ச்செல்வன், அருள் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.

    இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் நேதாஜி கொடுத்த புகாரின் பேரில் தமிழ்ச்செல்வன் மற்றும் 4 பேரும், தமிழ்ச்செல்வன் கொடுத்த புகாரின் பேரில் நேதாஜி உள்ளிட்ட 4 பேர் என 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    ×