search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொத்தடிமைகள் மீட்பு"

    • நெடுஞ்சாலை பணிகளுக்காக ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது.
    • கொத்தடிமைகளாக தொழிலாளர்களாக பணிக்கு அமர்த்திய 4 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

    ராயக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே உள்ள உடையாண்டஅள்ளி பகுதியில் நெடுஞ்சாலை பணிகளுக்காக ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டுள்ளதாகவும்,

    அவர்கள் தகரத்தால் ஆன கொட்டகைகளில் தங்க வைக்கப்பட்டு விருப்பத்திற்கு மாறாக வேலை செய்ய நிர்பந்திக்கப்பட்டுள்ளதாக ஓசூர் உதவி கலெக்டர் சரண்யாவுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து புகார் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டார். அதன் பேரில் உடையாண்டஅள்ளி கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் குழுவினர் அங்கு அதிரடியாக சென்று தேசிய நெடுஞ்சாலை பணிகளில் ஈடுபட்டவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    அதில் அவர்கள் ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும், கல் உடைக்கும் வேலை செய்து கொண்டிருந்ததும், அவர்கள் கொத்தடிமைகள் போல நடத்தப்பட்டதும் தெரியவந்தது.

    இதையடுத்து 5 பெண்கள் உள்பட 10 பேரை அதிகாரிகள் மீட்டனர். பின்னர் அவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இதுதொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் ராயக்கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் ராயக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் விசாரணை நடத்தி கொத்தடிமைகளாக தொழிலாளர்களாக பணிக்கு அமர்த்திய தெலுங்கானா மாநிலம் வானபருதி மாவட்டம், எத்லா கிராமத்தை சேர்ந்த சீனிவாசன்,

    கங்காதரன், ஷிதுளு மற்றும் தொழிலாளர்களை அழைத்து வந்த பொறுப்பாளர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பாரப்பா (58) ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் மீது கொத்தடிமைகள் தடுப்பு சட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஆம்பூரை சேர்ந்தவர்கள்
    • உதவி கலெக்டர் தலைமையில் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பாலூர் ஆர்.பட்டி பகுதியை சேர்ந்தவர் விஜயன் (28). இருளர் இனத்தை சேர்ந்த இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் கர்நாடக மாநிலம், ஹசான் மாவட்டம், கன்னிகடா கிராமத்தில் கரும்பு வெட்டும் பணிக்கு சென்றுள்ளார்.

    இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக விஜயன் வீடு திரும்பாத நிலையில் அவரை காண அவரது உறவினர்கள் கன்னிகடா கிராமத்திற்கு சென்ற போது அங்கு அவர் கொத்தடி மையாக வேலை பார்த்து வந்தது தெரியவந்தது.

    இந்நிலையில் விஜயனின் உறவினர்களும் அதே கிராமத்தில் கொத்தடிமைகளாக கடந்த 3 மாதங்களாக இருந்து வந்துள்ளனர்.

    இதுகுறித்து தகவலறிந்த சமூக ஆர்வலர் சம்பத் என்பவர் கர்நாடக மாநிலம் ஹசான் மாவட்டத்தில் உள்ள கோர்ட்டில் மனு அளித்துள்ளார்.

    அம்மனுவின் மீது விசாரணை மேற்கொண்ட சந்திராபட்னா வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் கன்னிகடா பகுதியில் கொத்தடிமைகளாக இருந்த விஜயன் உட்பட அவரது உறவினர்களான 11 பேரை மீட்டு வாணியம்பாடி உதவி கலெக்டர் பிரேமலதா தலைமையிலான அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

    தொடர்ந்து தமிழக அரசு சார்பில் 8 பேர்களின் வங்கி கணக்குகளில் தலா ரூ30 ஆயிரம் செலுத்தி 11 பேரையும் அவர்களது சொந்த உறவினர்களுடன் ஒப்படைத்து ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

    ×