search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொடிநாள்"

    படைவீரர் கொடிநாள் நிதி திரட்டும் வகையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு படை வீரர்கள் நலவாரிய செயலாளர் இன்று கொடி அணிவித்து இந்த ஆண்டுக்கான வசூலை தொடங்கி வைத்தார். #BrigadierMHRizvi #NarendraModi #ArmedForcesFlagDay
    புதுடெல்லி:

    நமது தாய்த் திருநாட்டின் எல்லைகளை இரவு பகலாகக் காத்து வரும் முப்படை வீரர்களின் தியாகங்களைப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7-ஆம் நாள் படை வீரர் கொடி நாளாக கொண்டாடப்படுகிறது.

    பனிமுகடுகள் உள்ள இமயமலை எல்லைகளையும், அடர்ந்த காடுகள் நிறைந்த வடகிழக்கு எல்லைப் பகுதிகளையும், பரந்த சமவெளியான வடமேற்கு எல்லைப் பகுதிகளையும், நீண்ட நெடிய கடல் பகுதிகளையும் காவல் காத்து, தாய்த் திருநாட்டிற்காக தமது உயிரைத் தியாகம் செய்த முப்படை வீரர்களின் குடும்ப நலன்களையும், ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்களின் நலன்களையும் பேணிக் காத்திடுவது நமது சமூகக் கடமையாகும்.

    இந்த சமூகக் கடமையை நிறைவேற்றிடும் பொருட்டு கொடிநாள் அன்று கொடி விற்பனை மூலமும், நன்கொடைகள் மூலமும் திரட்டப்படும் நிதி, முப்படை வீரர்களின் குடும்ப நல்வாழ்விற்கும், அண்டை நாட்டு எதிரிகள் மற்றும் உள்நாட்டு தீவிரவாதிகளின் தாக்குதலில் உடல் உறுப்புகளை இழந்த வீரர்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காகவும், முன்னாள் படை வீரர்களின் மேம்பாட்டிற்காகவும் செலவிடப்படுகிறது.


    ஒவ்வொரு மாநில நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட வாரியாக உள்ள அரசு அலுவலகங்களின் மூலம் கொடி நாள் நிதி திரட்டப்படுகின்றது. இந்த நிதி வசூலை அந்தந்த மாநிலங்களின் கவர்னர்கள் ஆண்டுதோறும் துவக்கி வைப்பார்கள். பின்னர், மாவட்டங்கள் தோறும் திரட்டப்படும் நிதியானது, மாநில அரசிடம் சேர்ப்பிக்கப்படும்.

    மாநில அரசுகள் அனைத்தும் அந்தந்த ஆண்டுகளில் தாம் சேமித்த நிதியை பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய அளவிலான படை வீரர்கள் நலவாரியத்திடம் ஒப்படைக்கும்.

    அவ்வகையில், இந்த ஆண்டுக்கான படைவீரர் கொடிநாள் நிதி திரட்டும் வகையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு படை வீரர்கள் நலவாரிய செயலாளர் பிரிகேடியர் எம்.ஹெச். ரிஸ்வி இன்று கொடி அணிவித்து இன்று வசூலை தொடங்கி வைத்தார். #BrigadierMHRizvi #NarendraModi #ArmedForcesFlagDay 
    நமது படை வீரர்களின் சேவையைப் போற்றிடும் வகையில் கொடிநாள் நிதிக்கு தாராளமாக நிதியுதவி அளிக்க வேண்டும் என்று தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கூறியுள்ளார். #FlagDay #GovernorBanwarilalPurohit
    சென்னை :

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    முப்படை வீரர்களான ராணுவம், கப்பல் மற்றும் விமானப்படை ஆகியவற்றில் வலிமையுடன் பணியாற்றி வருபவர்களின் பெருமையை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 7-ந்தேதி கொடிநாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

    நமது நாட்டின் எல்லைப் பகுதிகளை எதிரிகளிடமிருந்தும். எல்லைக்குள் ஊடுருகின்றவர்களிடமிருந்தும் காத்திடும் வகையில் திறமையுடன் செயல்பட்டு வரும் முப்படை வீரர்களின் தன்னலமற்ற சேவைகளை நாம் அனைவரும் நினைவு கூறக்கூடிய அருமையான தருணமாகும்.

    வீரமான படைவீரர்களை உருவாக்குவது மட்டுமின்றி, நாட்டுக்காக பணியாற்றிடும் இப்படை வீரர்கள் பணி ஓய்வு பெற்றோர், அவர்களின் வயதானோர், இயலாதோர் ஆகியோர் பயனடையும் வகையில் சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, சமூகப்பாதுகாப்பு போன்ற புதுமையான திட்டங்களை செயல்படுத்த முக்கிய நிதி ஆதாரமே, முப்படை கொடிநாள் நிதிக்கு ஆர்வமுடன் பொதுமக்களால் கொடுக்கப்படும் நிதி உதவியே ஆகும்.

    நமது படை வீரர்களின் சேவையைப் போற்றிடும் வகையில் கொடிநாள் நிதிக்கு தாராளமாக நிதியுதவி அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #FlagDay #GovernorBanwarilalPurohit 
    தமிழ்நாட்டு மக்களின் நாட்டுப்பற்றையும், ஈகை குணத்தையும் வெளிப்படுத்திடவும், கொடிநாள் நிதிக்கு மக்கள் அனைவரும் தாராளமாக நிதி வழங்க வேண்டுமென முதல்-அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். #EdappadiPalaniswami #Blackday
    சென்னை:

    கொடிநாள் தினத்தையொட்டி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நம் தாய் திருநாட்டின் எல்லைகளை பாதுகாக்கும் புனிதப் பணியில் ஈடுபட்டுள்ள முப்படை வீரர்களின் சேவையையும் தியாகத்தையும் போற்றும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் திங்கள் 7-ம் நாள் நாடு முழுவதும் படை வீரர் கொடி நாளாக அனுசரிக்கப்படுகிறது.



    இமயம் முதல் குமரி வரை பரந்து விரிந்திருக்கும் நமது பாரத நாட்டின் எல்லைப் பகுதிகளை இரவு பகல் பாராது காவல் காப்பதோடு, புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களின் போதும் நாட்டு மக்களை காக்கும் முப்படை வீரர்களின் குடும்ப நலன்களையும், ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்களின் நலன்களையும் பேணிக் காத்திடுவது நமது சமூகக் கடமையாகும்.

    தாய் நாட்டிற்காக தங்கள் இன்னுயிரை கொடுக்கும் தியாக சீலர்களான நமது முப்படை வீரர்களின் நலன் காத்திடவும், அவர்தம் குடும்பங்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, பல நலத் திட்டங்களை வகுத்து, சிறப்பாக செயல்படுத்தி வருகின்றது.

    போரில் உயிரிழந்த படை வீரர்களின் வாரிசு தாரர்களுக்கு உயர்த்தப்பட்ட கருணைத் தொகை மற்றும் கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்குதல், முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகள் பட்ட படிப்புகள் மற்றும் பட்ட மேற்படிப்புகள் படிப்பதற்கான கல்வி உதவித் தொகையை உயர்த்தி வழங்குதல், முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவரை சார்ந்தோர்க்கு மருத்துவ நிவாரண நிதியுதவித் தொகையை உயர்த்தி வழங்குதல், தமிழ்நாடு முன்னாள் படைவீரர்கள் கழகத்தின் வழியாக முன்னாள் படைவீரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குதல் போன்ற பல்வேறு நலத் திட்டங்களை அம்மாவின் அரசு செவ்வனே செயல்படுத்தி வருகிறது.

    கொடி விற்பனை மூலம் திரட்டப்படும் நிதியானது, முப்படை வீரர்களின் குடும்ப நல்வாழ்விற்காகவும், உடல் உறுப்புகளை இழந்த வீரர்களின் மறுவாழ்விற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

    இந்த சிறப்புமிக்க பணிகள் சீரிய முறையில் தொடர்ந்திடவும், தமிழ்நாட்டு மக்களின் நாட்டுப்பற்றையும், ஈகை குணத்தையும் வெளிப்படுத்திடவும், கொடிநாள் நிதிக்கு தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் தாராளமாக நிதி வழங்கி சிறப்பிக்க வேண்டுமென நான் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். #EdappadiPalaniswami #Blackday
    ×