search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கைத்தறி நெசவாளர்"

    • கலைக்கப்பட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு நிலுவைத் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
    • கைத்தறி துறை உதவி இயக்குநர் அலுவலக தொலைபேசி எண்.0452-2535669-க்கு தொடர்பு கொண்டு தகவலை பெற்றுக் கொள்ளலாம்.

    மதுரை

    மதுரை கைத்தறி துறை உதவி இயக்குநர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மாவட்டத்தில் செயல்பட்டு தற்போது கலைக்கப்பட்டுள்ள கீழ்கண்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களின் நெசவாளர்களுக்கு நெசவாளர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நிலுவைத்தொகை உள்ளன.

    நிலுவைத்தொகையை இந்த செய்தி வெளியிடப்பட்ட 15 தினங்களுக்குள் அலுவலக நேரத்தில் 29, கக்கன் தெரு, செனாய் நகர், மதுரை-20 என்ற முகவரியில் இயங்கி வரும் கைத்தறி துறை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு நேரில் வந்து உரிய ஆவணங்களுடன் (சங்க நெசவாளர் அட்டை மற்றும் ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு ஒளிநகல்) கைத்தறி அலுவலர்/கலைத்தல் அலுவலரிடம் கோரிக்கை மனுக்களை சமர்ப்பிக்க வேண்டும்.

    அவ்வாறு சமர்ப்பிக்கும் பட்சத்தில் அரசிடம் இருந்து நிலுவைத் தொகையை பெற்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சேமிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்ட பயனாளிகளிடம் இருந்து உரிய கோரிக்கைகள் வராத பட்சத்தில் நிலு வையில் உள்ள தொகைகள் அனைத்தும் அரசுக்கு மீள சமர்ப்பிக்கப்படும்.

    கூடுதல் தகவல்களுக்கு மேற்கண்ட முகவரியில் இயங்கி வரும் கைத்தறி துறை உதவி இயக்குநர் அலுவலக தொலைபேசி எண்.0452-2535669-க்கு தொடர்பு கொண்டு தகவலை பெற்றுக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைத்தறிகள் உள்ளன.
    • மத்திய அரசின் இத்திட்டத்தின் மூலம் எண்ணற்ற கைத்தறி நெசவாளர் குடும்பங்கள் பயன்பெறும்.

    பல்லடம் :

    கைத்தறி நெசவாளர்களுக்கு காப்பீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென பாரதீய மஸ்தூர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.இது குறித்து அதன் கோவை மண்டல பொது செயலாளர் நடராஜன் கூறியதாவது:-

    கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைத்தறிகள் உள்ளன. பாரம்பரியமாக நெசவு செய்து வரும் பல ஆயிரம் குடும்பங்களுக்கு இத்தொழில் வாழ்வாதாரமாக உள்ளது.குறைந்த கூலி வருவாயை கொண்டு குடும்பம் நடத்தி வரும் நெசவாளர்களின் நலன் கருதி மகாத்மா காந்தி பங்கர் பீமா யோஜனா காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தியது.

    இத்திட்டத்தில் உறுப்பினர் இயற்கை மரணமடைந்தால் குடும்பத்தினருக்கு 60 ஆயிரம் ரூபாய், விபத்து மரணம், அல்லது உடல் ஊனம் ஏற்பட்டால் 1.50 லட்சம் ரூபாயும் வழங்கப்படும். மத்திய அரசின் இத்திட்டத்தின் மூலம் எண்ணற்ற கைத்தறி நெசவாளர் குடும்பங்கள் பயன்பெறும்.ஆனால் 4 ஆண்டாக இத்திட்டம் செயல்பாட்டுக்கு வராமல் உள்ளது. இத்திட்டத்தில் இணைந்த நெசவாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்திற்கு உரிய காப்பீடு கிடைப்பதில்லை. இத்திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.5 ஆயிரம், முத்ரா கடனுக்கு மானியம் வழங்காதது, கூட்டுறவு சங்கங்களில் சேலை உற்பத்தி செய்த உறுப்பினர்களின் கணக்கிலேயே, மானிய தொகையை வரவு வைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

    ×