search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேஎல் ராகும்"

    • ஆஸ்திரேலியா தொடருக்கு முன்னதாக கே.எல் ராகுலை எச்சரிக்கும் வகையில் தினேஷ் கார்த்திக் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
    • 35 போட்டிகளுக்கு மேல் விளையாடிய ஒரு துவக்க வீரரின் சராசரி 30-க்கு கீழ் இருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்று அல்ல.

    இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நேற்றுடன் முடிவுக்கு வந்தது. அதன்படி நடைபெற்ற முடிந்த இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இந்த டெஸ்ட் தொடருக்கு முன்பாக நடைபெற்ற ஒருநாள் தொடரின் போது காயமடைந்த ரோகித் சர்மா டெஸ்ட் அணியிலிருந்து வெளியேறியதால் அவருக்கு பதிலாக கே.எல் ராகுல் இந்த தொடரில் கேப்டனாக செயல்பட்டார்.

    ஒரு கேப்டனாக இந்த டெஸ்ட் தொடரில் ராகுல் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும் ஒரு பேட்ஸ்மேனாக இந்த தொடரில் அவர் சோபிக்க தவறிவிட்டார். வங்கதேச அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் மொத்தம் 57 ரன்களை மட்டுமே அவர் அடித்து ஏமாற்றத்தை அளித்துள்ளார்.

    ஏற்கனவே நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரிலிருந்து பேட்டிங் ஃபார்மை இழந்து தவித்து வரும் அவரின் தொடர்ச்சியான செயல்பாடுகள் தற்போது அவரது இடத்தின் மீது பெரிய கேள்வியை எழுப்பி உள்ளன.

    ஏனெனில் அவருக்கு பதிலாக அணியில் இடம்பெற்று வரும் இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி வரும் வேளையில் கே.எல் ராகுலின் இந்த தொடர் சொதப்பல் அனைவரது மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் வங்கதேச தொடரிலும் கே.எல் ராகுல் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளதால் அடுத்து வரும் ஆஸ்திரேலியா தொடர் அவருக்கு முக்கியமான தொடராக பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் ஆஸ்திரேலியா தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் முன்னணி கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக் கே.எல் ராகுலை எச்சரிக்கும் வகையில் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறுகையில்:-

    பிப்ரவரி, மார்ச் மாதம் நடைபெற இருக்கும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ராகுல் கண்டிப்பாக இடம் பிடிப்பார்.

    ஆனால் அந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றால் நிச்சயம் அவர் அணியிலிருந்து நீக்கப்படுவார் என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

    இந்திய அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ள அவர் தனது சராசரியை 30-க்கு உள்ளே தான் வைத்திருக்கிறார்.

    இப்படி 35 போட்டிகளுக்கு மேல் விளையாடிய ஒரு துவக்க வீரரின் சராசரி 30-க்கு கீழ் இருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்று அல்ல. எனவே ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் அவர் சிறப்பாக செயல்பட்டாக வேண்டியது அவசியம். அந்த தொடரிலும் அவர் சொதப்பினால் நிச்சயம் அவரது இடம் சுப்மன் கில்லிடம் பறிபோக வாய்ப்புள்ளது என்று தினேஷ் கார்த்திக் அவரை எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×