search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூட்டுகுடிநீர் திட்டம்"

    • தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தை அமைச்சர் நேரு இன்று தொடங்கி வைக்கிறார்.
    • கொரோனா தாக்கத்தினாலும் பணியில் தொய்வு ஏற்பட்டு கைவிடப்படும் சூழ்நிலை உருவானது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகருக்கு தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு கடந்த 2012-ம் ஆண்டு அன்றைய முதல்- அமைச்சரால் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் அப்பணிகள் எதுவும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டது.

    அதன்பின் ராஜபாளையம் தொகுதிக்கு தி.மு.க. சட்டமன்ற உறுப்பினராக தங்கப்பாண்டியன் பொறுப்பேற்றவுடன், அம்ரூத் திட்டத்தில் மத்திய-மாநில அரசு மானியத்தின் கீழ் 2016-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் 110 விதியின் கீழ் மீண்டும் ராஜபாளையம் நகருக்கு தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் அறிவிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் பணீந்திரரெட்டியிடம் எம்.எல்.ஏ. சென்று மனு அளித்து தொடர்ந்து வலியுறுத்தி அனைத்து முயற்சிகளும் செய்து ராஜபாளையம் நகருக்கு ரூ172.70 கோடி மதிப்பில் மேற்கண்ட திட்டத்திற்கு 30-1-2017 அன்று அரசாண வெளியிடப்பட்டது. இந்த திட்டத்திற்காக ராஜபாளையம் நகரில் 11 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க பட இருந்தது.

    கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தங்கப் பாண்டியன்.எம்.எல்.ஏ தலைமையில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்ட பூமி பூஜை நடை பெற்றது. தங்க பாண்டியன் எதிர்கட்சி சட்ட மன்ற உறுப்பினராக இருந்தபோதிலும் பணியில் தொய்வு ஏற்படும் போது அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டு திட்டப் பணியை விரைவுப்படுத்தினார். அதன்பின் ஒப்பந்த தாரரின் தனிப்பட்ட பிரச்சினையாலும், கொரோ னா தாக்கத்தினாலும் பணியில் தொய்வு ஏற்பட்டு கைவிடப் படும் சூழ்நிலை உருவானது.

    இந்நிலையில் மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைந்து மு.க.ஸ்டாலின் முதல் அமைச்ச ராக பொறுப்பேற்ற வுடன் திட்டப்பணிக்கு மீண்டும் செயல்படுத்த தங்க பாண்டியன் எம்.எல்.ஏ. நடவடிக்கை மேற்கொண் டார். அதன்படி நகராட்சி நிர்வாக துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேருவையும், விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசுவிடமும் பேசி திட்டப்பணியை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. விரைவு படுத்தினார்.

    தற்போது தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து உள்ளது. இதற்கான தொடக்க விழா இன்று (26-ந்தேதி) மாலை 6 மணியளவில் சங்கரன் கோவிலில் நடக்கிறது. அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கி திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.

    ராஜபாளையம் மக்களின் நீண்டநாள் கனவான தாமிரபரணி குடிநீர் வந்தடைந்தவுடன், ஆளுயர மாலையை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ.வுக்கு வெற்றி மாலையாக அணிவித்து மகிழ தொண்டர்கள் காத்திருக்கிறார்கள்.

    ×