search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூடுதல் ஆசிரியர்கள்"

    • பெரியபட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புதிய வகுப்பறைகள் கட்டி, கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்க கோரிக்கை வைத்துள்ளனர்.
    • இந்த பள்ளியில் நடப்பு கல்வியாண்டில் மொத்தம் 447 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் ஒன்றிய கவுன்சிலர் (எஸ்.டி.பி.ஐ.) பைரோஸ் கான் கூறியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கல்வி மாவட்டம் திருப்புல்லாணி வட்டார கல்வி அலுவலகம் கட்டுப்பாட்டில் செயல்படும் பெரியபட்டினம் சேகு ஜமாலுதீன் நினைவு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி 3 ஏக்கர் பரப்பளவில் 1960-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த பள்ளியில் நடப்பு கல்வியாண்டில் மொத்தம் 447 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    இந்த பள்ளியில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 3 ஒட்டு கட்டிடத்திலும், ஒரு கான்கிரீட் கட்டித்திலும், மொத்தம் 4 கட்டிடத்தில் 8 வகுப்பறைகள் உள்ளன, இதில் 1 வகுப்பறை அலுவலகமாக செயல்படுகிறது.

    7 வகுப்பறைகளில் மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள்.1-ம் வகுப்பில் 85 குழந்தைகளும், 2-ம் வகுப்பில் 101, 3-ம் வகுப்பில் 101, 4-ம் வகுப்பில் 85, 5-ம் வகுப்பில் 75 மாணவர்களும் படித்து வருகின்றனர்.

    ஒவ்வொரு வகுப்பும் 2 பிரிவுகளாக்கப்பட்டு 10 வகுப்புகள் நடைபெற்று வருகிறது. 7 வகுப்புகள் வகுப்பறை அறைகளுக்குள்ளும், மற்ற 3 வகுப்புகள் பள்ளி நடைபாதையிலும் நடைபெற்று வருகிறது.

    இந்த பள்ளியில் அரசு வழிகாட்டுதலின்படி தலைமையாசிரியர் உள்பட 13 ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும். ஆனால் தலைமையாசிரியர் உள்பட 6 ஆசிரியர்களும் 3 மாற்றுப்பணி ஆசிரி யர்களும் மொத்தம் 9 ஆசியர்கள் பணியில் உள்ளனர். இன்னும் 4 ஆசிரியர்கள் கூடுதலாக நியமனம் செய்ய வேண்டும். கூடுதலாக 4 வகுப்பறைகள் தேவைப்படுகிறது.

    இந்த பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர்கள் நியமனம் மற்றும் கூடுதல் வகுப்பறைகள் வேண்டி முதல்-அமைச்சர், பள்ளி கல்விதுறை அமைச்சர், தலைமைச் செயலாளர், பள்ளி கல்வித்துறை செயலாளர், பள்ளி கல்விதுறை இயக்குநர், கலெக்டர் மற்றும் மண்டபம் கல்வி மாவட்ட அலுவலர்களுக்கு மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

    மாணவர்கள் நலன் கருதி பெரியபட்டினம் சேகு ஜலாலுதீன் அம்பலம் நினைவு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு உடனடியாக 2 வகுப்பறைகள் கொண்ட 2 கட்டிடம் கட்டவும், கூடுதலாக 4 ஆசிரியர்களை நியமிக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

    ×