search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குளங்கள் தூர்வாரும் பணி"

    • பணியை துரிதமாக முடிக்க அறிவுறுத்தல்
    • 22-வது வார்டுக்குட்பட்ட பெதஸ்தா குளம் ரூ.40 லட்சம் செலவில் தூர்வாரப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில் :v

    நாகர்கோவில் மாநகர பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை செயல்படுத்த மேயர் மகேஷ் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக மக்கள் பயன்படுத்த முடியாமல் கிடந்த குளங்களை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    அதன்படி நாகர்கோவில் மாநகர பகுதியில் உள்ள குளங்கள் தூர்வாரப்பட்டு சீரமைக்கப்பட்டு வருகிறது. 41-வது வார்டுக்குட்பட்ட வட்டவிளை சூர்யா குளத்தை தூர்வார ரூ.47 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பணிகளை மேயர் மகேஷ் இன்று காலை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் 22-வது வார்டுக்குட்பட்ட பெதஸ்தாகுளம் ரூ.40 லட்சம் செலவில் தூர்வாரப்பட்டு வருகிறது. அந்த பணியையும் ஆய்வு செய்து பணிகளை துரிதமாக முடிக்க அறிவுறுத்தினார். இருளப்பபுரம் பூங்காவை பார்வையிட்டு ஆய்வு செய்த மேயர் மகேஷ் நமக்கு நாமே திட்டத்தில் அதை சீரமைக்கவும் நடவடிக்கை மேற்கொண்டார்.

    இதைத்தொடர்ந்து மேயர் மகேஷ் கூறுகையில், வட்டவிளை சூர்யாகுளம் சீரமைப்பு பணிகள் 90 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. மக்கள் பயன்படுத்த முடியாமல் கிடந்த குளத்தை தூர்வாரி கரைகள் கட்டப்பட்டுள்ளது. பொதுமக்கள் நடந்து செல்ல வசதியாக நடைபாதையும் அமைக்கப்பட்டு வருகிறது. மின்விளக்கு வசதியும் செய்யப்பட்டுள்ளது. இதே போல் பெதஸ்தா குளமும் தூர்வாரப்பட்டு சீரமைப்பு பணி கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குளத்தை தூர் வாரி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதால் நிலத்தடி நீர்மட்டமும் உயரும் என்றார்.

    ஆய்வின்போது ஆணையர் ஆனந்த மோகன், என்ஜினீயர் பாலசுப்பிர மணியன், கவுன்சிலர் அனிலா சுகுமாரன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    நாகர்கோவில் மாநகராட்சி 13-வது வார்டுக்குட்பட்ட ஒற்றைதெரு பகுதியில் கழிவுநீர் ஓடை மற்றும் கொம்மண்டை யம்மன் கோவில் தெருவில் தார் சாலை அமைக்கும் பணியையும், 23-வது வார்டுக்கு உட்பட்ட எஸ்.எல்.பி.பள்ளி பின்புறம் ரூ.40 லட்சம் செலவில் தார்சாலை அமைக்கும் பணியையும் தொடங்கி வைத்தார்.

    ×