search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குமரி மாவட்ட"

    • வருகிற 3-ந்தேதி மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
    • இதில் பங்குபெற விரும்பும் விளையாட்டு வீரர்கள் ஆதார் அட்டையுடன் கலந்துகொள்ள வேண்டும்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கால்பந்து சங்க செயலாளர் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கன்னியாகுமரி மாவட்டத்தில் 20 வயதுக்குட்பட்ட இளையோர் கால்பந்து அணிக்கான விளையாட்டு வீரர்கள் தேர்வு நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் வைத்து வருகிற 3-ந்தேதி மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.

    இதில் பங்குபெற விரும்பும் விளையாட்டு வீரர்கள் ஆதார் அட்டையுடன் கலந்துகொள்ள வேண்டும். அடுத்த மாதம் (அக்டோபர்) 11-ந் தேதி முதல் 15ந் தேதி வரை தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு கால்பந்து கழகம் நடத்தும் மாவட்டங்களுக்கு இடையேயான போட்டிகள் நடைபெற உள்ளது. தேர்வு செய்யப்பட்ட குமரி மாவட்ட கால்பந்து விளையாட்டு வீரர்கள் இந்த போட்டியில் பங்கு பெறுவார்கள். விளையாட்டு வீரர்களுக்கான தேர்வு குமரி மாவட்ட கால்பந்து கழக பொருளாளர் ஆனந்த் ஏ.வில்சன் தலைமையில் நடைபெறுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கலைஞர் உரிமை திட்ட தொடக்க விழா நிகழ்ச்சி இன்று நடந்தாலும் நேற்று பயனாளிகளுக்கு வங்கி கணக்கில் ரூ.1000-ம் கிரெடிட் ஆனது
    • பெண்கள் மகிழ்ச்சியடைந்து உற்சாகமடைந்து உள்ளனர்

    நாகர்கோவில்: கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை இன்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.குமரி மாவட்டத்தில் தக்கலை அருகே திருவிதாங்கோட்டில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். கலைஞர் உரிமை திட்ட தொடக்க விழா நிகழ்ச்சி இன்று நடந்தாலும் நேற்று பயனாளிகளுக்கு வங்கி கணக்கில் ரூ.1000-ம் கிரெடிட் ஆனது பெண்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பணம் வங்கி கணக்கில் வந்ததையடுத்து பெண்கள் மகிழ்ச்சியடைந்து உற்சாகமடைந்து உள்ளனர். சில பெண்கள் இன்றே வங்கிகளுக்கு சென்று பணத்தை பணத்தை எடுத்தனர்.

    கலா, குலசேகரம் : நான் கூலி வேலை செய்து வருகிறேன். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த மாதம் உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்திருந்தேன். தற்பொழுது அதற்கான பணம் எனது வங்கி கணக்கில் வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த ஆயிரம் பணம் எனது சொந்த செலவுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.எனவே முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    தங்கபாய், மணலி விளை : எனக்கு 4 குழந்தைகள் உள்ளனர். அவர்களுக்கு திருமணம் ஆகி விட்டது. நான் தற்பொழுது தனியாக வசித்து வருகிறோம். எனது கணவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு உள்ளார். தற்பொழுது இந்த உதவித்தொகை மருத்துவ செலவு மட்டும் இன்றி மற்ற செலவுகளுக்கும் உதவியாக இருக்கும்.எனவே முதல்-அமைச்சருக்கு என்றும் நன்றிக்கடன் பட்டவராக இருப்போம்.

    சத்யா தேவி, வடசேரி: தி.மு.க. அரசு பொறுப்பேற்றவுடன் தேர்தல் அறிக்கையில் கூறிய திட்டங்களை நிறைவேற்றியது. தற்பொழுது மேலும் ஒரு திட்டமாக கலைஞர் உரிமை தொகை திட்டத்தை செயல்படுத்தி யுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. ஏற்க னவே மகளிருக்கு இலவச பஸ் பயண த்தை செயல்படுத்தியதன் மூலமாக நாங்கள் இலவசமாக வெளியிடங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் அந்த பஸ்சில் பயணம் செய்கிறோம்.தற்பொழுது ரூ.1000 மாதம் தோறும் வழங்கி இருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது. வீட்டிற்கு தேவையான பொருட்களை இந்த பணத்தின் மூலம் வாங்கி கொள்ளலாம். இது மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.

    கவிதா, வடசேரி : தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்கான பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகி றார். பெண்கள் நலனே முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு திட்டங்கள் செயல்ப டுத்தப்பட்டு வரு கிறது. தற்பொழுது ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு நன்றி தெரிவி த்துக்கொள்கிறேன்.

    கனகம், நாகர்கோவில் வயல்தெரு: கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தி ற்கான ரூ.1000 பணம் நேற்றே வங்கிக் கணக்கில் வந்துவிட்டது. மாத மாதம் இந்த தொகை கிடைக்கும் போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அனைத்து மாதமும் பணத்தை வங்கி கணக்கில் வழங்கினால் உதவிக ரமாக இருக்கும். இந்த அரசுக்கு நாங்கள் நன்றி கடன் பட்டிருப்போம்.

    சசிரேகா, வைத்தியநாதபுரம்: தி.மு.க. அரசு ஏற்கனவே மகளி ருக்கு இலவச பஸ்களை இயக்கி வரு கிறது. தற்பொழுது மாதம்ரூ.1000 வழங்கியிருப்பது மகிழ்ச்சி தருகிறது. பெண்கள் நலனில் அக்கறை கொண்ட அரசாக இந்த அரசு விளங்கி வருகிறது. இது ஆயிரம் ரூபாய் உதவித்தொகை அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. இந்த பணம் எங்கள் வாழ்வில் ஒளியேற்றுவதற்கு பயன் உள்ளதாகவும் அமைந்துள்ளது.

    விஜிலா, பூந்தோப்பு: மகளிர் உரிமை தொகை ஏழைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதுவரை எந்த ஒரு முதல்-அமைச்சரும் செய்யா ததை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின் செய்துள்ளார். இந்த தொகை வாழ்வாதாரத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும். மேலும் இந்த தொகை தெய்வின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

    ×