search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்"

    • செயல்படாத குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
    • சிறுநீரக நோயால் பலர் சிகிச்சை பெறுவதாக பரபரப்பு தகவல் வெளிவந்துள்ளது.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி ஒன்றியத்திலுள்ள 44 ஊராட்சிகளில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் நரிக்குடி, என்.முக்குளம், புல்வாய்க் காரை, மானூர், வீரசோழன், கொட்டகாட்சியேந்தல், மறையூர் உட்பட பல்வேறு ஊராட்சிகளில் பொதுமக் கள் 5 ரூபாய் நாணயம் செலுத்தி குடிநீர் பெரும் வகையில் 10-க்கும் மேற்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பதற்கு திட்டங்கள் தீட்டப்பட்டு குடிநீர் நிலையங்கள் செயல்படுத்தப்பட்டன.

    இதில் கொட்டகாட்சி யேந்தல் மற்றும் மறையூர் ஆகிய ஊராட்சிகளில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பதற்காக நிர்வாக அனுமதி இருந்தும் தற்போது வரை அதனை முழுமையாக செயல்படுத்துவதில் ஏற்பட்டு வரும் தொடர்ச்சியான மந்தநிலை காரணமாக திட்டமானது கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்க ளுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில் பெரும் சிக்கல் நீடித்து வருகிறது.

    மேலும் வீரசோழன் ஊராட்சிக்கு உட்பட்ட ஒட்டங்குளம், சாலை இலுப்பைகுளம் ஊராட் சிக்கு உட்பட்ட சொட்டமுறி என இன்னும் இது போன்ற பல்வேறு கிராமங்களில் குடிநீரில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக குழாயில் வரும் குடிநீரை குடிப்பதற்கு பெரிதும் அச்சப்பட்டு வருகின்றனர்.

    மேலும் குடிக்க குடிநீரின்றி வேறு வழியில்லாமல் பல வருடமாக அதனை குடித்து வருவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கல்லடைப்பு ஏற்பட்டு சிறுநீரக கோளாறுகளால் கடும் பாதிப்படைந்து வருகி ன்றனர்.

    இந்த நிலையில் நரிக்குடி ஒன்றியத்தில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களும் அதன் திட்டங்கள் முடிக்கப்பட்ட நிலையில் இன்னும் மின் இணைப்பே கொடுக் கப்படாமல் உள்ளது.

    எனவே பெரும்பாலான குடிநீர் நிலையங்கள் இழுத்து மூடப்பட்டு செயல்பாடின்றி கிடப்பதால் பல லட்சம் ரூபாய் மதிப் புள்ள குடிநீர் நிலையங்க ளின் உபகரணங்கள் வீணாகி வருகிறது. இதன் மூலம் அரசுக்கு கடும் நிதியிழப்பு ஏற்பட்டு வருவதுடன் பொதுமக்களும் சுகாதாரமான குடிநீருக்காக பல வருடங்களாக ஏங்கி தவித்து வருவதாக அப்பகுதி களிலுள்ள சமூக ஆர்வலர் கள் கடும் மன வருத்தத்துடன் தெரிவித்தனர்.

    மேலும் பல கிராமங்களில் குழாய்களில் வரும் குடிநீரை குடித்து வருவதால் பொது மக்களுக்கு கல்லடைப்பு ஏற்பட்டு அதனால் சிறுநீரக கோளாறுகள் ஏற்பட்டு பெரும்பாலானோர் மருத்து வமனையில் அவ்வப்போது சிகிச்சை பெற்று வருவதா கவும் தெரிய வருகிறது. சில பகுதிகளில் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் வேதனை யுடன் தெரிவித்தனர்.

    ஆகவே மாவட்ட கலெக்டர் பொதுமக்களின் நலன் கருதி குடிநீரில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கல்லடைப்பு மற்றும் சிறுநீ ரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டு வரும் கிராமங்களை கண்டறிந்து ஆய்வு செய்து உடனடியாக அங்கு 5 ரூபாய் நாணய குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்து தருவதோடு, அதன் செயல் பாடுகளை அதிகாரிகள் மூலமாக அவ்வப்போது ஆய்வுகள் செய்து பொது மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்திட வேண்டுமென பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×