search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிருஷ்ணாநீர்"

    கண்டலேறு அணையிலிருந்து தொடர்ந்து கிருஷ்ணா தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் பூண்டி ஏரியின் நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. #PoondiLake
    ஊத்துக்கோட்டை:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இந்த ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து கடந்த 29-ந் தேதி முதல் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    பூண்டி ஏரியின் உயரம் 35 அடியாகும். 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். கடந்த மாதம் 29-ந் தேதி பூண்டி ஏரியின் நீர்மட்டம் 12.25 அடியாக பதிவானது.வெறும் 13 மல்லியன் கனஅடி தண்ணீர் மட்டும் இருப்பு இருந்தது.

    கண்டலேறு அணையிலிருந்து தொடர்ந்து கிருஷ்ணா தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் பூண்டி ஏரியின் நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. இன்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் 24.67 அடியாக பதிவானது. 799 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    கடந்த மாதம் 29-ந் தேதி முதல் இன்று காலை வரை 28 நாட்களில் பூண்டி ஏரியின் நீர் மட்டம் 12. 42 அடி உயர்ந்துள்ளது. பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 524 கனஅடி வீதம் கிருஷ்ணா நீர் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

    பூண்டியில் ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் வீதம் இணைப்பு கால்வாயில் திறக்கப்படுகிறது. சென்னை குடிநீர் வாரியத்துக்கு 18 கனஅடி நீர் பேபி கால்வாய் மூலமாக அனுப்பப்படுகிறது. #PoondiLake

    ×