search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிராம சுகாதாரம்"

    • கிராமங்களில் சுகாதாரத்தை பேணிக்காக்க வேண்டும்.
    • கலெக்டர் ஆஷா அஜித் வலியுறுத்தினார்.

    சிவகங்கை

    சிவகங்கை ஊராட்சி ஒன்றியம் குமாரபட்டி ஊராட்சிக்குட்பட்ட காராம்போடை கிராமத்தில் சுதந்திரதினவிழாவை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்றத்தலைவர் சூரியகலா தலைமை தாங்கினார். செந்தில்நாதன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். சிறப்பு பார்வையாளராக கலெக்டர் ஆஷா அஜித் கலந்து கொண்டு பேசிய தாவது:-

    நாடு முழுவதும் சுதந்திர திருநாள் அமுதபெருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. நமது முன்னோர்கள் உயிர்தியாகம் செய்து நமக்கு சுதந்திரம் பெற்று தந்துள்ள னர். அதனடிப்படையில் கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு வசதி, விஞ்ஞானம் ஆகியவைகளில் வளர்ச்சி பெற்று, நாம் வளர்ச்சி பாதையை நோக்கி பயணித்துக் கொண்டி ருக்கிறோம்.

    ஒவ்வொரு கிராமங்க ளிலும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், நடை பெற்று வரும் பணிகள், வரவு-செலவு கணக்குகள் ஆகியவைக் குறித்து பொது மக்கள் கண்காணிப்பது ஒவ்வொருவரின் கடமை யாகும். மேலும், 15-வது நிதிக்குழு மான்யம், ஊரக சொந்த நிதி ஆகியவைகளை கிராமங்களின் வளர்ச்சிக்கு முறையாகப் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

    மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு அடிப்படையானது கல்வியாகும். அதனை மாணவர்களுக்கு அளித்திடும் வகையில் தமிழக அரசால் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. எனவே கிராமப்புறங்களில் உள்ள பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை இடைநிற்றலின்றி பள்ளிக்கு அனுப்பி, உயர்படிப்புகளை பயில்வதற்கு உறுதுணையாக இருந்திட வேண்டும். குறிப்பாக பெண் கல்வியை ஊக்குவிப்பதற்கான நடவ டிக்கைகள் அனைவரின் பங்கு இருந்திடல் வேண்டும்.

    மேலும் கிராமப் பறங்களில் கழிப்பறைகளை மட்டுமே முறையாகப் பயன்படுத்தி, சுகாதா ரத்தினை பொதுமக்கள் பேணிக்காத்திட வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்து சுற்றுச்சூழலை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமையாகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சிவராமன், இணை ஆணையர் (இந்து சமய அறநிலையத்துறை) பழனிக்குமார், இணை இயக்குநர் (வேளாண்மை) தனபாலன், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, சிவகங்கை ஊராட்சி ஒன்றியக்குழு பெருந் தலைவர் மஞ்சுளா பாலசந்தர், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×