search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிராம உதவியாளர் பணி"

    • 6 ஆயிரம் பேர் எழுதினர்
    • போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 40 கிராம உதவியாளர் பணிக்கு இன்று எழுத்து தேர்வு நடந்தது. 40 காலி பணியிடங்களுக்கு மொத்தம் 6000 பேர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து இருந்தனர்.

    வேலூர் தந்தை பெரியார் என்ஜினீயரிங் கல்லூரி, ஸ்ரீபுரம் ஸ்பார்க் மெட்ரிகுலேஷன் பள்ளி, காட்பாடி வி.ஐ.டி பல்கலைக்கழகம், குடியாத்தம் கே. எம். ஜி கல்லூரி, கே.வி.குப்பம் வித்யா லட்சுமி மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் பேரணாம்பட்டு இஸ்லாமியா மேல்நிலைப் பள்ளியில் இன்று எழுத்து தேர்வு நடந்தது.

    இன்று காலை 9:30 மணிக்குள் வந்த தேர்வர்கள் மட்டும் தேர்வு அறைகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர். தாமதமாக வந்தவர்களை திருப்பி அனுப்பினார். தேர்வு மையங்களுக்கு செல்வதற்கு முன்பாக தேர்வு எழுத வந்தவர்களை போலீசார் சோதனை செய்த பின்பு அனுப்பி வைத்தனர்.

    அவர்களிடம் இருந்த செல்போன் புத்தக மற்றும் மின்னணு சாதகங்கள் தேர்வு அறைக்குள் அனுமதி இல்லாததால் அவற்றை பறிமுதல் செய்து பாதுகாப்பாக வைத்தனர்.தேர்வு நடைபெறுவதை ஒட்டி தேர்வு மையங்களுக்கு முன்பாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    • திருவள்ளுர் மாவட்ட வருவாய் அலகில், காலியாக உள்ள 93 கிராம உதவியாளர் பணியிடம் நிரப்ப, இணைய வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
    • விண்ணப்பதாரர்களுக்கும் வருகிற 4-ந் தேதி காலை 10 மணிக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்படவுள்ளது.

    திருவள்ளுர்:

    திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    திருவள்ளுர் மாவட்ட வருவாய் அலகில், காலியாக உள்ள 93 கிராம உதவியாளர் பணியிடம் நிரப்ப, இணைய வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, வருவாய் வட்டாட்சியர்கள் மூலம் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டன. ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கும், மாவட்ட வேலைவாய்ப்பகம் மற்றும் முன்னாள் படைவீரர் நல அலுவலகம் மூலம் பெறப்பட்ட பட்டியலில் உள்ள ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கும் வருகிற 4-ந் தேதி காலை 10 மணிக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்படவுள்ளது.

    இதற்காக, திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள கலவலக் கண்ணன் செட்டி இந்து மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, காக்களுர் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஊத்துக்கோட்டை, ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருமுல்லைவாயில் சரோஜினி வரதப்பன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பூந்தமல்லி, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி அரசு கலைக்கல்லூரி, திருத்தணி செயின்ட் மேரிஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, பள்ளிப்பட்டு அய்யன் வித்யாஸ்ரம் மேல்நிலைப்பள்ளி, ஆர்.கே.பேட்டை, கோஜன் ஸ்கூல் ஆப் பிசினஸ் அன்டு டெக்னாலஜி, செங்குன்றம் பொன்னேரி மற்றும் மஹரிஷி வித்யா மந்திர்பள்ளி கவரைப்பேட்டை, கும்மிடிப்பூண்டி ஆகிய பள்ளிகளில் தேர்வு நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×