search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கியூஜெ மோட்டார்"

    • கியூ.ஜெ. பைக்குகளுக்கு அசத்தல் விலை குறைப்பு அறிவிப்பு.
    • அதிகபட்ச சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    கியூ.ஜெ. மோட்டார் நிறுவனம் தனது மோட்டார்சைக்கிள் மாடல்கள் விலையை இந்தியாவில் குறைத்து இருக்கிறது. அதன்படி கியூ.ஜெ. மாடல்கள் விலை ரூ. 40 ஆயிரம் வரை குறைந்திருக்கிறது.

    விலை குறைப்பை தொடர்ந்து கியூ.ஜெ. SRC 500 மற்றும் SRV 300 மாடல்களின் விலை முறையே ரூ. 2 லட்சத்து 39 ஆயிரம் மற்றும் ரூ. 3 லட்சத்து 19 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது முந்தைய விலையை விட ரூ. 40 ஆயிரம் குறைவு ஆகும்.

    கியூ.ஜெ. SRC 250 விலை ரூ. 1 லட்சத்து 39 ஆயிரம் என மாறி இருக்கிறது. இது முந்தைய விலையை விட ரூ. 31 ஆயிரம் குறைவு ஆகும். இந்த விலை குறைப்பு ஜனவரி 8-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. விலை குறைப்பின் மூலம் கியூ.ஜெ. மாடல்களின் விற்பனை அதிகரிக்கும் என அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

     


    கியூ.ஜெ. SRC 250 மாடலில் ரெட்ரோ டிசைன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட வட்ட வடிவ லைட்கள் மற்றும் கண்ணாடிகள் உள்ளன. இத்துடன் டியர் டிராப் ஃபியூவல் டேன்க், வயர் ஸ்போக் வீல் வழங்கப்படுகிறது. இந்த மாடலில் 249சிசி, இன் லைன் டுவின் சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த என்ஜின் 17.1 ஹெச்.பி. பவர், 17 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. பிரேக்கிங்கிற்கு டிஸ்க் பிரேக் வழங்கப்படுகிறது. கியூ.ஜெ. SRC 500 மாடலில் டூயல் சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்படுகிறது. 

    • கியூஜெ மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் தனது இருசக்கர வாகனங்கள் விலையை அறிவித்து இருக்கிறது.
    • முதற்கட்டமாக கியூஜெ மோட்டார் நிறுவனத்தின் நான்கு மோட்டார்சைக்கிள் மாடல்கள் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கின்றன.

    கியூஜெ மோட்டார் நிருவனம் இந்திய சந்தையில் SRC250 ரெட்ரோ ரோட்ஸ்டர், SRC500, SRV300 குரூயிசர், SRK400 ஸ்போர்ட் நேக்கட் என நான்கு மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இவற்றின் விலை ரூ. 1 லட்சத்து 99 ஆயிரம் என துவங்குகிறது.

    புதிய கியூஜெ SRC250 மாடல் டிவிஎஸ் அபாச்சி RTR 160 4V மாடலுக்கு போட்டியாக அறிமுகமாகி இருக்கிறது. இதில் 249சிசி, பேரலெல் ட்வின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 17.4 ஹெச்பி பவர், 17 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    கியூஜெ SRC500 மாடலில் 480சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 25.5 ஹெச்பி பவர், 36 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த மோட்டார்சைக்கிள் ஒட்டுமொத்த எடை 250 கிலோ ஆகும். இதன் விலை ரூ. 2 லட்சத்து 59 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் ஆகும்.

    குரூயிசர் மாடலான கியூஜெ SRV300 மாடலில் 296சிசி, வி-ட்வின் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 30.3 ஹெச்பி பவர், 26 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இதன் விலை ரூ. 3 லட்சத்து 49 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் ஆகும்.

    கியூஜெ SRK400 மாடலில் 400சிசி, லிகவிட் கூல்டு பேரலல் ட்வின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 40.9 ஹெச்பி பவர், 37 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் விலை ரூ. 3 லட்சத்து 59 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது இந்திய சந்தையில் கியூஜெ மோட்டார் நிறுவனத்தின் சக்திவாயந்த மாடல் ஆகும்.

    ×