search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காஷ்மீர் பிரிவினைவாதம்"

    பயங்கரவாத தாக்குதல்களுக்கு நிதி திரட்டியது தொடர்பாக காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்குக்கு 22-ம் தேதி வரை விசாரணை காவல் விதிக்கப்பட்டது. #YasinMalik #JKLFbanned #NIAremand
    புதுடெல்லி:

    ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இம்மாநிலத்தில் உள்ள பல்வேறு குழுவினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் சில அமைப்பினர் அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களின் மூலம் பயங்கரவாதிகளாக செயல்பட்டு வருகின்றனர்.

    அவ்வகையில், இயங்கிவரும் பிரிவினைவாத இயக்கங்களில் ஒன்றான ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி இயக்கத்துக்கு மத்திய அரசு கடந்த மாதம் தடை விதித்தது.

    பிரிவினைவாதி யாசின் மாலிக் தலைமையிலான ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி இயக்கம் பயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்துக்கொண்டு இந்தியாவில் வன்முறையை ஆதரித்தும்  பிரிவினையை உருவாக்கும் காரியங்களையும் செய்து வருவதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.


    தடுப்புக்காவல் சட்டப்படி ஜம்முவில் உள்ள கோட்டா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த யாசின் மாலிக்குக்கு எதிராக கடந்த 2017-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் மேற்கொண்டு விசாரணை நடத்த தீர்மானித்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அவரை நேற்று டெல்லிக்கு அழைத்து வந்து சிறையில் அடைத்தனர்.

    இன்று டெல்லி தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் யாசின் மாலிக்கை ஆஜர்படுத்திய அதிகாரிகள் பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவுவதற்காக நிதி திரட்டிய விவகாரம் தொடர்பாக விரிவாக விசாரிக்க வேண்டியுள்ளதால் அவரை விசாரணை காவலில் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதியிடம் தெரிவித்தனர். இதையடுத்து, வரும் 22-ம் தேதிவரை அவரை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.

    30 ஆண்டுகளுக்கு முன்னர் முன்னாள் மத்திய மந்திரி முப்தி முஹம்மது சையத் மகள் ருபயா சையத் கடத்தல் வழக்கு மற்றும் 4 விமானப்படை வீரர்கள் படுகொலை உள்பட 30-க்கும் அதிகமான வழக்குகள் யாசின் மாலிக் மீது நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. #YasinMalik #JKLFbanned #NIAremand
    ஹிஸ்புல் முஜாகிதீன் பிரிவினைவாத இயக்க தலைவரின் மனைவியும் தேசதுரோக வழக்கில் கைதானவருமான ஆசியா அந்திராபி-யின் சிறை காவல் செப்டம்பர் 7-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டது. #AsiyaAndrabi
    புதுடெல்லி:

    காஷ்மீரில் இயங்கிவரும் அனைத்து கட்சி ஹுரியத் மாநாட்டில் அங்கம் வகிக்கும் ‘துக்த்தரன் இ மில்லத் என்னும் பெண் பிரிவினைவாத இயக்கத்தை தோற்றுவித்தவர் ஆசியா அந்திராபி. இந்தியாவில் இருந்து காஷ்மீரை பிரித்துதர வேண்டும் என்னும் கொள்கைக்காக போராடும் இவரது இயக்கத்தில் பல்வேறு பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

    தடை செய்யப்பட்ட ஹிஸ்புல் முஜாகிதீன் பிரிவினைவாத இயக்கத்தை ஆரம்பித்த தலைவர்களில் ஒருவரான டாக்டர் காசிம் ஃபக்டூ என்பவரை இவர் கடந்த 1990-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

    1992-ம் ஆண்டிலிருந்து டாக்டர் காசிம் ஃபக்டூ சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் காஷ்மீரில் பல்வேறு போராட்டங்களை ஆசியா அந்திராபி தலைமைதாங்கி நடத்தி வந்தார்.

    25-3-2015 அன்று காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியை ஏற்றிவைத்து அந்நாட்டின் தேசிய கீதத்தை பாடியது, ஜம்மு-காஷ்மீரில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்ட வேளையில் 12-9-2015 அன்று ஒரு பசு மாட்டை வெட்டி, அந்த வீடியோவை வெளியிட்டது என பல்வேறு போராட்டங்களால் இவரது பெயர் பிரபலமானது.


    இந்நிலையில், பாகிஸ்தானின் தூண்டுதலின்பேரில் தாய்நாட்டுக்கு எதிராக போர் தொடுத்த குற்றத்துக்காக தேசதுரோக வழக்கில் கடந்த 6-7-2018 அன்று ஆசியா அந்திராபி மற்றும் அவருடன் இருந்த இரு பெண்களை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களை நீதிமன்ற காவலில் அடைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

    தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்துவரும் நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் ஆசியா அந்திராபி உள்ளிட்ட 3 பெண்களை தேசிய புலனாய்வு முகமை போலீசார் இன்று ஆஜர்படுத்தினர். அவர்களின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 7-ம் தேதிவரை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #NIASpecialCourt #Kashmiriseparatist #AsiyaAndrabi  #AsiyaAndrabijudicialcustody

    ×