search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கானாத்தூர் பகுதியில் கொள்ளை"

    நீலாங்கரை மற்றும் கானாத்தூர் பகுதியில் காரில் வந்து கொள்ளையடித்த 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 91 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.

    சென்னை:

    நீலாங்கரை-கானாத்தூர் பகுதிகளில் பூட்டிய வீடுகளை குறி வைத்து ஒரு கும்பல் கடந்த சில நாட்களாக கை வரிசை காட்டியது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    கொள்ளையர்களை பிடிக்க தென்சென்னை இணை ஆணையர் மகேஸ்வரி, அடையாறு துணை கமி‌ஷனர் சசாங்சாய் ஆகியோர் உத்தரவின்பேரில் உதவி கமி‌ஷனர் விஸ்வேஸ்வ ரய்யா தலைமையில் இன்ஸ் பெக்டர்கள் சுந்தரம், ஆனந்தன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படையினர் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

    அப்போது ஈச்சாங்பாக்கம், வெட்டுவாங்கேணி, உத் தண்டி, கானாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காரில் வந்து டிப்-டாப் இளைஞர்கள் கைவரிசை காட்டியிருப்பது தெரிய வந்தது.

    கேமராவில் பதிவான உருவங்களை வைத்தும், கார் நம்பரை வைத்தும் துப்பு துலக்கப்பட்டது. இதில் சென்னை கோட்டூர்புரம் அருகே உள்ள கோட்டூர் பகுதியைச் சேர்ந்த 3 இளைஞர்களும், ராயபுரத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவரும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது.

    இதையடுத்து போலீசார் ஞானசேகர், சுரேஷ்குமார், சுரேஷ், பஷீர் ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 91 பவுன் தங்க நகை, 2 கிலோ வெள்ளி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    கொள்ளையடிக்க பயன்படுத்தப்பட்ட காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த கொள்ளையர்களுக்கு வேறு ஏதேனும் வழக்கில் தொடர்புள்ளதா? என்பது பற்றி விசாரணை நடைபெறுகிறது.

    ×