search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவனம் தேவை"

    • 960 நாழிகைக்கு ஒருமுறை தேக சம்பந்தம் செய்து சுக்கிலத்தை வெளிப்படுத்தி விடவேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.
    • பெண்களுக்கு அடிக்கடி சேருவதால் கருப்பையில் பிணி உண்டாகுமென்றும், ருதுவில் பிரச்னையும் ஏற்படுமென்கிறது சித்த சாஸ்திரம்.

    மாதம் ஒன்றுக்கு எத்தனை முறை கணவனும் மனைவியும் ஒன்று சேரலாம்? தற்போது நமது இந்திய நாட்டில் பெரும்பாலும் பகல், இரவு, எந்த நேரத்திலும் தாம்பத்தியம் கொண்டுவிடுகிறார்கள். இதன் காரணமாக ஆண்கள், பெண்கள் தேகம் வெளுத்து, வாடி, வருந்தி வலுவற்று விடுகின்றனர்.

    ஆகாரம், மைதுனம், நித்திரை, பயம் இந்த நான்கிலும் அதிக ஜாக்கிரதையாக இருபாலரும் இருத்தல் அவசியம்.

    இதில் பாதிப்பு ஆண்களுக்கே அதிகம். பகற்பொழுதில் ஒருக்காலும் ஒன்று சேருவது கூடாது. இதனால் ஆண்களின் வீரியம் பங்கம் உண்டாகும் என்று வள்ளலார் சொல்லியுள்ளார்.

    ஆகாரம், மைதுனம் ஆகிய இரண்டிலும் மிக்க ஜாக்கிரதையாக இருத்தல் அவசியமாகும். இல்லை எனில் தேகமானது அதி சீக்கிரத்தில் கூற்றுவனுக்கு இரையாகிவிடும் என்றும் கூறுகிறார்.

    சுக்கிலமாகிய திரியை விசேஷமாக தூண்டி, அடிக்கடி சுக்கிலத்தை வீணே செலவு செய்தால், திரியானது அணைந்து போய், ஆயுளாகிய பிரகாசத்தை பாழ்படுத்திவிடும்.

    960 நாழிகைக்கு ஒருமுறை தேக சம்பந்தம் செய்து சுக்கிலத்தை வெளிப்படுத்தி விடவேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. 60 நாழிகை என்பது ஒரு நாள். 960 நாழிகை என்பது 16 நாளாகும். இந்த கணக்குப்படி மாதம் இரண்டுமுறை மட்டுமே தனது நன் மனையாளை மருவுதல் வேண்டும். இதற்கு மேற்படின், பல பிணிகளுக்கு உள்ளாக நேரிடுமென்றும், ஆண்களுக்குரிய வீரியமும், விறைப்பும் குறைந்து தளர்ச்சி உண்டாகி உடல் ரோகம் உண்டாகுமென்கிறது சாஸ்திரம்.

    பெண்களுக்கு அடிக்கடி சேருவதால் கருப்பையில் பிணி உண்டாகுமென்றும், ருதுவில் பிரச்னையும் ஏற்படுமென்கிறது சித்த சாஸ்திரம்.

    சுத்த இரத்தம் 60 துளிகள் கொண்டது ஒரு துளி விந்துவாகும். ஆண்கள் வீரியத்தை பலமுறை வெளியேற்றினால் அது எவ்வளவு இரத்தம் குறையுமென்று இதன் மூலம் அறியலாம்.

    இவ்வாறு அபரிமிதமான இரத்தம் குறையவே ஜீவாக்கினி குறைகிறது. ஜீவாக்கினி குறையவே தேக உறுப்புக்களின் சுபாவத் தொழில் கெட்டு, அதனால் தேகம் தளர்ந்து, முகம் வெளுத்து, கண்பார்வை மங்கி, ஜீரண சக்தி குறைந்து, ஞாபக சக்தி குறைந்து, மொத்தத்தில் பலவீனமாகி, கைகால்கள் நடுக்கம், மூட்டு வீக்கம் உண்டாகி, நடை தளர்ந்து சோர்ந்து, பல தீராத வியாதிகளுக்கு மனிதன் தள்ளப்படுகிறான்.

    எனவே தம்பதிகள் இந்த நடைமுறையை கையாண்டால் தேக சௌக்கியமுடன் நல்ல குழந்தைகளை பெற்று வாழ்வில் நலமடைவார்களென்று சித்த நூல்கள் கூறுகிறது.

    -சிவசங்கர்

    ×