search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்நாடக போலீஸ் பாடம்"

    ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவோருக்கு, ஆபத்தை உணர்த்தும் வகையில் பெங்களூர் போலீசார் வழங்கிய புதுவிதமான கவுன்சிலிங் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. #HelmetCampaign #BangalorePolice
    பெங்களூரு:

    இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று போக்குவரத்து காவல்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. வெறும் வார்த்தைகளால் இந்த பிரச்சாரத்தை முன்னெடுத்துச் சென்றால் வாகன ஓட்டிகளின் கவனத்தை ஈர்க்க முடியாது என்பதால், இப்போது வித்தியாசமான முறைகளை போலீசார் கையில் எடுத்துள்ளனர்.

    அவ்வகையில் கர்நாடக மாநிலம் பெங்களூர் போக்குவரத்து போலீசார், முக்கியமான சாலைகளில் எமதர்மன் வேஷத்தில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்கின்றனர். ஹெல்மெட் அணியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டியை எமன் வேடத்தில் வரும் போலீஸ்காரர் நிறுத்துகிறார். கையில் பாசக் கயிறு வைத்துக்கொண்டு மிரட்டும் அவர், வாகன ஓட்டியிடம் ஹெல்மெட் அணியவேண்டியதன் அவசியத்தை எடுத்துக் கூறுகிறார்.



    ஹெல்மெட் போடாமல் வந்து விபத்தில் சிக்கினால் என்ன ஆகும்? என்பதை உணர்த்தும் வகையில் பாசக் கயிற்றால் வாகன ஓட்டியின் கழுத்தில் மாட்டி இழுக்கிறார். சித்ரகுப்தன் வேடத்தில் மற்றொரு போலீஸ்காரரும் உடனிருக்கிறார். இந்த பிரச்சார வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

    இதேபோன்று சமீபத்தில் சென்னையில் ஒரு போக்குவரத்து போலீஸ்காரர் எமன் வேடத்தில் வந்து, ஹெல்மெட் போடாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அறிவுரைகள் வழங்கியது குறிப்பிடத்தக்கது. #HelmetCampaign #BangalorePolice



    ×