search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கம்பன் விழா"

    • கம்பராமாயணம் பற்றி ஓவிய கண்காட்சி நடந்தது
    • முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன், சுகி சிவம், பர்வீன் சுல்தானா பங்கேற்பு

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூரில் இரண்டு நாள் கம்பன் விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    திருப்பத்தூரில் 44-வது கம்பன் விழா திருப்பத்தூர் ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. கடந்த சனிக்கிழமை தொடங்கியது. திருவையாறு இசைக் குழு வித்வான் ஞானம் குழுவினரின் மங்கள இசையுடன் தொடங்கியது. பள்ளி மாணவ மாணவிகளின் கம்பராமாயணம் பற்றி ஓவிய கண்காட்சி நடைபெற்றது. தொடர்ந்து கல்வெட்டுகளில் நிழற்பட காட்சி நடைபெற்றது தொடக்க விழா நிகழ்ச்சிக்கு கம்பன் கழகத் தலைவர் வழக்கறிஞர் எஸ்.எஸ்.மணியன் தலைமை வகித்தார் அனைவரையும் கே. எம். சுப்பிரமணியம் வரவேற்றார், கம்பன் கவியெல்லாம் நான் என்ற தலைப்பில் சென்னை பாரதி கிருஷ்ணகுமார் பேசினார்.

    கம்பன் படைத்த காண்டங்கள் நூலை சீனி திருமால்முருகன் வெளியிட பேராசிரியர் மோகன்காந்தி அறிமுகம் செய்தார் காடும் நாடும் என்ற தலைப்பில், பேராசிரியர் பர்வீன் சுல்தானா, பேசினார், வழக்காடு மன்றம் நிகழ்ச்சியில் திருப்புமுனைகளில் சிறந்து விளங்குவது கைகேயையே என்பது பொருந்தாது என்ற தலைப்பில் நடுவராக சுகிசிவம் பங்கேற்று பேசினார், தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் பேச்சுப்போட்டி, ஓவி யப்போட்டி, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவி களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக உலகம் யாவையும் தலைப்பில் எஸ்தர் ஜெகதீஸ்வரி பேசினார் தொடர்ந்து கவியரங்கம் நிகழ்ச்சியில், கலைமாமணி முத்தையா, கவிஞர் ஆத்தூர் சுந்தரம், கவிஞர் நா. சியாமளா, மு பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து உரை அரங்கம் நிகழ்ச்சியில் செந்தமிழில் ஒரு சுந்தர காண்டம் என்ற தலைப்பில் முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வம், பேசினார். நெறிமுறைகளை கடைப்பிடிப்பதில் சிறந்தவர் என்று வெளிப்படுத்துபவர் என்ற தொடர் பட்டிமன்றத்தில் நடுவராக புலவர் ராமலிங்கம் கலந்து கொண்டு பேசினார்.

    நிகழ்ச்சியில் தமிழ் அறிஞர்கள் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பா டுகளை கம்பன் கழக தலைவர் எஸ்.எஸ்.மணியன் செயலாளர் தமிழ்ச்செம்மல்இரத்தின நடராஜன் உள்பட உறுப்பி னர்கள் செய்திருந்தனர்.

    ×