search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடைசி வெள்ளி"

    • 65-ம் ஆண்டு யானை மீது சந்தனகுடம் பவனி யானை வரவழைத்த பிள்ளையார் கோவிலில் இருந்து நேற்று மண்டைக் காடு பகவதி அம்மன் கோவிலுக்கு புறப்பட்டுச் சென்றது.
    • ஏற்பாடுகளை தேவி நன்னெறி மன்ற நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

    கன்னியாகுமரி :

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஆடி கடைசி வெள்ளிக்கிழ மையை முன்னிட்டு மணவாளக்குறிச்சி தேவி நன்னெறி மன்றத்தின் 65-ம் ஆண்டு யானை மீது சந்தனகுடம் பவனி யானை வரவழைத்த பிள்ளையார் கோவிலில் இருந்து நேற்று மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு புறப்பட்டுச் சென்றது.

    விழாவையொட்டி காலை 7 மணிக்கு திருநடை திறப்பு, 8 மணிக்கு அபிஷேகம், 8.30 மணிக்கு தீபாராதனை, பகல் 1 மணிக்கு நாதஸ்வர மேளம், 1.30 மணிக்கு தருவை நடேசர் கோவிலில் இருந்து சந்தனம் எடுத்து வருதல், 2.30 மணிக்கு சந்தனம் குடங்களில் நிரப்புதல், மாலை 4.30 மணிக்கு செண்டை மற்றும் நாதஸ்வர மேளத்துடன் யானை மீது சந்தனகுடம் பவனி மணவாளக்குறிச்சி பாலம், ஜங்சன், பிள்ளையார்கோவில், பரப்பற்று, கூட்டுமங்கலம் வழியாக மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு புறப்பட்டு சென்றது. அங்கு 6 மணிக்கு அம்மனுக்கு சந்தனகாப்பு, 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, 7.45 மணிக்கு அலங்கார சிறப்பு தீபாராதனை ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை தேவி நன்னெறி மன்ற நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

    ×