search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடலோர கிராமங்கள்"

    • கடலோர கிராமங்களில் பனை விதைகள் விதைக்கப்பட்டுள்ளது.
    • மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகள் நடப்படும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் சுனாமி புயல் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களில் இருந்து பாதுகாக்கும் அரணாகவும் பனை தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தும் வகையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேளாங்கண்ணி, காமேஷ்வரம் உள்ளிட்ட கடலோர கிராமங்களை பனை விதைகள் விதைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் பனை விதைகள் விதைக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :-

    பிரதாபராமபுரம், விழுந்த மாவடி, காமேஸ்வரம், , நாகூர் பட்டினச்சேரி, வேட்டைக்காரன் இருப்பு, உள்ளிட்ட 24 மீனவர் கிராமங்களில் 7.1/2 லட்சம் பனை விதைகள் விதைக்கப்பட்டு இருப்பதாகவும் இப்பணியில் கல்லூரி மாணவர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள் தன்னார்வு அமைப்பினர் ஈடுபட்டதா கவும் இதன் மூலம் வரும் காலங்களில் கடற்கரை ஓரம் இயற்கை பேரிடர் இருந்து பாதுகாக்கப்படும் என தெரிவித்தார்.

    குறிப்பாக பிரதாப ராமபுரம் ஊராட்சியில் உள்ள கடற்கரைப் பகுதியில் ஆய்வுமேற்கொண்ட கலெக்டர் 4 ஆண்டுகளில் இந்த கிராமத்தில் மட்டும் 5 லட்சம் பண விதைகள் நடப்பட்டு தற்போது நன்கு வளர்ந்திருப்பதாகவும், இதில் 90% மரக்கன்றுகள் நல்ல நிலையில் வளர்ந்து இருப்பதாகவும் அடுத்த கட்டமாக உள் கிராமங்களில் தமிழ்நாடு கிரீன் விஷன் திட்டத்தின் கீழ் மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகள் நடப்படும் என தெரிவித்தார்.

    • மீன் பிடிக்க செல்ல கூடாது என்றும் போலீசார் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    • படகுகள் மீனவ கிராமங்களில், கடற்கரை ஓரங்களில் நிறுத்த வைக்கப்பட்டுள்ளன.

    புதுச்சேரி:

    காரைக்கால் கடலோர கிராமங்களில் உள்ள மீனவர்களை பாதுகாப்பாக இருக்கவும், கடலுக்கு மீன் பிடிக்க செல்ல கூடாது என்றும் போலீசார் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

    இதனையடுத்து, காரைக்கால் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்ட் லோகேஸ்வரன் உத்தரவின் பெயரில், மாவட்ட காவல்துறை சார்பில், நேற்று மாலை முதல் இரவு வரை கிளிஞ்சல் மேடு, காரைக்கால் மேடு, கோட்டுச்சேரி மேடு, மண்டபத்தூர், பட்டினச்சேரி உள்ளிட்ட மீனவ கிராமங்களில், கடற்கரை ஓரங்களில் நிறுத்த வைக்கப்பட்டுள்ள படகுகளை பாதுகாப்பான இடத்திற்கு நகர்த்தவும், மீன்பிடி தடவளங்களை பாதுகாப்பான முறையில் வைத்துக் கொள்ளவும், காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லக்கூடாது என்றும் கடலுக்கு மீன் பிடிக்க சென்றவர்கள் கரை திரும்ப வேண்டும் என மீன்வளத்துறை மற்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

    ×