என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கடத்தல் தங்கம் பறிமுதல்"
- துபாய், அபுதாபி, குவைத்தில் இருந்து வந்த பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை.
- நான்கு பயணிகளிடம் மொத்தம் ரூ.136.92 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்.
சென்னை விமான நிலைய முதன்மை சுங்கத்துறை ஆணையர் மேத்யூ ஜாலி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
துபாயில் இருந்து விமானம் மூலம் கடந்த 9ந் தேதி சென்னை வந்த பயணி ஒருவரை இடைமறித்து சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டதில், நூதன முறையில் மறைத்து எடுத்து வரப்பட்ட ரூ.30.31 லட்சம் மதிப்பிலான 690 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் துபாயில் இருந்த வந்த முகமது பலீல் என்பவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பசை வடிவத்தில் மறைத்து கொண்டு வரப்பட்ட ரூ.65.30 லட்சம் மதிப்பிலான 1,486 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் அபுதாபியில் இருந்து வந்த பயணி ஒருவரை சோதனையிட்டதில், ரூ.30.09 லட்சம் மதிப்பிலான 685 கிராம் தங்கத்தினை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
குவைத் நாட்டிலிருந்து விமானம் மூலம் அக்டோபர் 7-ம் தேதி வந்த பயணி ஒருவரை சோதனையிட்டதில், 3 கிலோ எடை கொண்ட தங்க ஆபரணங்கள் மற்றும் ஒரு கிலோ எடை கொண்ட தங்க மோதிரங்களை மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. ரூ.11.20 லட்சம் மதிப்புள்ள 255 கிராம் எடை கொண்ட அந்த தங்க ஆபரணங்கள் கைப்பற்றப்பட்டன.
இந்த நான்கு சம்பவங்களில் மொத்தம் ரூ.136.92 லட்சம் மதிப்பிலான 3,116 கிராம் எடை கொண்ட தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.