search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓட்டல் உரிமையாளர் கைது"

    2 சிறுமிகளை பாலியல் தொல்லை செய்த ஓட்டல் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை கொட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் ராஜ் (வயது 37). இவர் எல்லைப்பிள்ளை சாவடியில் தனியார் திருமண மண்டபம் அருகே ஓட்டல் நடத்தி வருகிறார்.

    இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே இவரது ஓட்டலுக்கு எதிரே காபி கடை நடத்தி வரும் கணவரை இழந்த ஒரு பெண்ணுடன் ராஜிக்கு பழக்கம் ஏற்பட்டது.

    அப்போது ராஜி தனக்கு திருமணம் நடக்கவில்லை என கூறி அந்த பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார்.

    அந்த பெண்ணுக்கு முதல் கணவர் மூலம் 15 வயதில் மகள் இருந்தார். மேலும் 16 வயது பெண்ணை வளர்ப்பு மகளாகவும் வளர்த்து வந்தார். அவர்கள் இருவரும் தாயாருடன் வசித்தனர்.

    இதற்கிடையே அந்த 2 சிறுமிகளுக்கும் ராஜ் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.

    இதுபற்றி அவர்கள் புதுவை குழந்தைகள் நல கமிட்டியிடம் புகார் கொடுத்தனர். அவர்கள் விசாரணை நடத்தியதில், பாலியல் தொல்லை நடந்தது உண்மை என்று தெரியவந்தது.

    இதனால் புதுவை குழந்தைகள் நல கமிட்டியினர் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வா குப்தாவுக்கு புகார் தெரிவித்தனர்.

    இதையடுத்து இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கும்படி ரெட்டியார் பாளையம் போலீசாருக்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வா குப்தா உத்தரவிட்டார்.

    இதனையடுத்து ரெட்டியார்பாளையம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் விசாரணை நடத்தி குழந்தைகள் பாலியல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ராஜை கைது செய்தார்.

    புதுவையில் பொதுப் பணித்துறை ஊழியரை தாக்கிய ஓட்டல் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

    புதுச்சேரி:

    புதுவை நெல்லித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 44). பொதுப்பணித்துறை ஊழியர். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுவை அண்ணா சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டபோது அதற்கான பணத்தை தரவில்லை என கூறப்படுகிறது.

    இந்த நிலையில் இளங்கோவன் நேற்று அதே ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். அப்போது ஓட்டல் உரிமையாளர் ரவிச்சந்திரன் (54). முன்பு ஓட்டலில் சாப்பிட்டதற்கு பணம் கொடுக்காதது குறித்து தட்டிக்கேட்டார்.

    இதனால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரம் அடைந்த ஓட்டல் உரிமையாளர் ரவிச்சந்திரன் பொதுப்பணித்துறை ஊழியர் இளங்கோவனை சரமாரியாக தாக்கினார்.

    இதில், இளங்கோவனுக்கு கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    பின்னர் இது குறித்து ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, நாராயணசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ஓட்டல் உரிமையாளர் ரவிச்சந்திரனை கைது செய்தனர்.

    ×