search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓசூர் சிறை"

    தேன்கனிக்கோட்டை அருகே மாணவியை கடத்தி சென்ற ஊர்காவல் படை வீரரை போலீசார் கைது செய்து ஓசூர் சிறையில் அடைத்தனர்.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ராயக்கோட்டை ரகமத் காலனியை சேர்ந்தவரின் 16 வயது மகள் ராயக்கோட்டை அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 6-ந்தேதி கடைக்கு சென்றவர் அதன்பின் வீடு திரும்ப வில்லை. பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும், அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து பெற்றோர் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

    அதில் ராயக்கோட்டை ஜெ.ஜெ,நகரை சேர்ந்த முருகனின் மகனும், ஊர்க்காவல் படைவீரருமான சங்கர் (26) என்பவர் தனது மகளை கடத்தி சென்றுள்ளதாக தெரிவித்தனர்.

    இது குறித்து விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் சாந்தா மாணவியை மீட்டு பேற்றோரிடம் ஒப்படைத்தார். அவரை கடத்தி சென்ற சங்கர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்து தேன்கனிக்கோட்டை கோர்ட்டில் ஆஜர் செய்து ஓசூர் கிளை சிறையில் அடைத்தார். 
    ஓசூர் சிறையில் இருந்து தப்பி ஓடிய கைதியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கைதி தப்பி ஓடிய சம்பவம் தொடர்பாக சிறை வார்டன் சஸ்பெண்டு செய்யப்பட உள்ளார்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கிளைச் சிறையில் தற்போது 32 விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    இதில் அடிதடி வழக்கில் கைதான கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூர் ஜீவா நகரை சேர்ந்த தனஞ்ஜெய் (வயது 40) என்ற கைதியும் இந்த சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் நேற்று காலை 7.30 மணிக்கு தப்பி ஓடி விட்டார். அவர் வாசல் வழியாக சென்றாரா அல்லது கழிவறை வழியாக சென்றாரா என்று தெரியவில்லை.

    இது குறித்து ஓசூர் டவுன் போலீசில் சிறைத்துறை நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. போலீசார் தனிப்படை அமைத்து தப்பி ஓடிய கைதியை தேடி வருகிறார்கள்.

    கைதி தப்பி ஓடிய சம்பவம் தொடர்பாக சிறை வார்டன் சஸ்பெண்டு செய்யப்பட உள்ளார்.

    ×