search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓ ராஜா"

    துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா நுகர்வோர் அமைப்பைச் சேர்ந்த துரை என்பவருடன் பேசிய ஆடியோ அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #ADMK #ORaja
    தேனி:

    துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா தற்போது மதுரை மாவட்ட ஆவின் தலைவராக உள்ளார். இவர் நுகர்வோர் அமைப்பைச் சேர்ந்த துரை என்பவருடன் பேசிய ஆடியோ அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோ வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக பகிரப்பட்டு வருவதால், சர்ச்சை எழுந்துள்ளது.

    தற்போது ஓ.ராஜாவும், நுகர்வோர் அமைப்பைச் சேர்ந்த துரை என்பவருடன் செல்போனில் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



    பெரியகுளம் பகுதியில் உள்ள ரேசன் கடைகளில், பொருள்களுக்கு அதிக விலை வைத்து விற்கப்படுவதாகவும், அதற்கு ஓ.ராஜா தான் காரணம் என அறிந்துகொண்டு அதை தட்டிக்கேட்ட துரையிடம் போனில் பேசும் ஓ.ராஜா, “ஏன்டா ரேசன் கடைகளுக்கு சென்று பிரச்சனை செய்கிறாய்?” என கேட்கிறார். “நான் நுகர்வோர் அமைப்பில் இருக்கிறேன். ஒரு கார்டுக்கு 40 ரூபாய் கமிஷன் அடிக்கிறார்கள். அதனால்தான் கேட்டேன்” என்கிறார் துரை.

    “நீ தேவையில்லாத வேலை பார்க்கிறாய். உன் பிழைப்பை மட்டும் பார். எல்லாம் எங்களுக்குத் தெரியும். ஒரு மீட்டிங் போட்டு செலவழிக்க வேண்டும் என்றால் ரூ.1 லட்சம் ஆகும். அதற்கு நீயா செலவு செய்வாய்? பணம் சேர்க்காமலும் பதவி இல்லாமலும் காரில் போக முடியுமா? ஓட்டுக்கு ரூ.500 வரை பணம் கொடுத்தால்தான் ஜெயிக்க முடியும். அது போன்ற எங்களுக்கு யார் என்ன செய்கிறார்கள்? என்று தெரியாதா? தேவையில்லாமல் ரேசன் கடைகளில் பிரச்சனை செய்து உன் வாழ்க்கையை கெடுத்துக் கொள்ளாதே என்று மிரட்டுகிறார். இந்த ஆடியோ வெளியாகி கடும் விமர்சனத்தைச் சந்தித்துள்ளது. #ADMK #ORaja
    ‘அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி நீக்கம், இணைப்பு ஏமாற்று வேலை’ என தங்க தமிழ்செல்வன் கூறினார். #ADMK #AMMK #ThangaTamilSelvan #OPSbrother
    தேனி:

    அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் ஆண்டிப்பட்டியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஆண்டிப்பட்டியில் செயல்வீரர்கள் கூட்டம் திறந்தவெளியில் பொதுக்கூட்டம் போல் நடத்தப்பட்டது. கூட்டத்தை காட்டுவதற்காக ஊரக வேலை திட்ட பணியாளர்களை வேலை அட்டையை புதுப்பித்து தருவதாக கூறி ஏமாற்றி அழைத்து வந்து அமர வைக்கப்பட்டனர்.

    அந்த கூட்டத்தில் பங்கேற்ற துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரனை நம்பி சென்றவர்கள் யாரும் பிழைத்ததாக சரித்திரம் இல்லை என்றார். டி.டி.வி.தினகரன் இல்லாவிட்டால், ஓ.பன்னீர்செல்வத்தால் முதல்-அமைச்சராக வந்திருக்க முடியாது.

    ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். நான் இப்போது சவால் விடுகிறேன். ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. டெபாசிட் இழக்கும்.

    மதுரையில் அ.தி.மு.க. சார்பில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க இயக்குனர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர்களை ஓ.பன்னீர்செல்வம் தம்பி ஓ.ராஜா பணம் கொடுத்து தோற்கடித்து விட்டார். இதுதொடர்பாக அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உதயகுமார் மற்றும் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் புகார் கொடுத்தனர். ஓ.ராஜா மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்கள் விலகி விடுவோம் என கூறியதால், வேறுவழியின்றி ஓ.ராஜாவை அ.தி.மு.க.வில் இருந்து நீக்குவதாக அறிவித்தனர்.



    இந்த அறிவிப்பு வந்த சில நாட்களில் என்ன பேரம் நடைபெற்றது என்பது தெரியவில்லை. அவரை மீண்டும் கட்சியில் இணைத்து விட்டனர். இது ஏமாற்று வேலை. தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு மக்கள் மரண அடி கொடுக்க தயாராகி விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #AMMK #ThangaTamilSelvan
    அ.தி.மு.க.வில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ். சகோதரர் ஓ.ராஜா இன்று மீண்டும் அக்கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளார். #OPSbrothersuspended #OPSbrother #OPSbrotherinducted #AIADMK
    சென்னை:

    அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி, ஓ.ராஜா. பெரியகுளம் நகர மன்ற முன்னாள் தலைவரான இவர், அ.தி.மு.க.வில் உறுப்பினராக இருந்தார். கட்சியில் எந்த பதவியும் வகிக்காவிட்டாலும் தேனி, மதுரை பகுதியில் செல்வாக்கு மிகுந்தவராக வலம் வந்தார்.
     
    இவரை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கி கட்சித்தலைமை சமீபத்தில் நடவடிக்கை எடுத்தது.

    முன்னதாக, மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க ஒன்றிய தலைவர் பதவிக்கு அவர் மனுதாக்கல் செய்திருந்தார். இது அ.தி.மு.க.வினருக்கு பிடிக்காததால், கட்சிக்குள் பூசல் வெடித்தது. எனினும் மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க ஒன்றிய தலைவராக ஓ.ராஜா தேர்வானதாக கடந்த 19-ம் தேதி அறிவிப்பு வெளியானது.

    இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே, அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் அவரை நீக்குவதற்கான அறிவிப்பை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், ஓ.ராஜாவின் அண்ணனும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் வெளியிட்டனர்.

    ஜெயலலிதா உயிருடன் இருந்த நேரத்தில், ஓ.ராஜா மீது கொலை வழக்கு புகார் எழுந்ததை தொடர்ந்து கட்சியில் இருந்து ஓரம் கட்டப்பட்டு இருந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராக ஆன நேரத்தில், மதுரை, தேனி மாவட்ட அ.தி.மு.க.வில் ஓ.ராஜாவின் தலையீடு அதிகரித்தது. இதன் காரணமாக அவர் நீக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரம் தெரிவித்தது.

    ஓ.பன்னீர் செல்வமே தனது தம்பியை கட்சியில் இருந்து நீக்கியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், தனது செயலுக்காக ஓ.ராஜா நேரிலும், கடிதம் மூலமாகவும் வருத்தம் தெரிவித்ததால் அவரை மீண்டும் கட்சியில் இணைத்து கொண்டதாக அ.தி.மு.க. தலைமை இன்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #OPSbrothersuspended #OPSbrother #OPSbrotherinducted #AIADMK 
    அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் சகோதரர் நீக்கம் வரவேற்கத்தக்கது என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். #MinisterJayakumar
    சென்னை:

    சென்னை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தம்பி ஓ.ராஜா அ.தி.மு.க.வில் இருந்து திடீரென்று நீக்கப்பட்டது ஏன்?

    பதில்:- ‘அண்ணன் என்னடா? தம்பி என்னடா? இந்த அவசரமான உலகத்திலே’ என்கிற மாதிரி, கட்டுக்கோப்பான இயக்கத்தில் கட்சி விரோத நடவடிக்கையை யார் செய்தாலும் சரி, அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட வேண்டியவர்கள் தான்.

    இதில் அண்ணன், தம்பி உறவுக்கு இடம் இல்லை. எனவே அண்ணனாக இருந்தாலும், தம்பியாக இருந்ததாலும் தவறு என்றால் தவறு தான். எனவே அந்த அடிப்படையில் யார் தவறு செய்தாலும் சரி, நிச்சயம் நடவடிக்கை தொடரும் என்பதை இதன் மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் உணர்த்தி இருக்கிறார்கள்.

    கேள்வி:- ஓ.ராஜா நீக்கத்துக்கு என்ன காரணம்?

    பதில்:- கட்சி விரோத நடவடிக்கைகள் குறித்து வெளியே சொல்ல முடியாது. தம்பி என்றும் பார்க்காமல் நடவடிக்கை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது ஆகும். நல்ல விஷயம்.

    கேள்வி:- மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்கு கஜா புயல் நிவாரணத் தொகை எப்போது கிடைக்கும்?

    பதில்:- இந்த விஷயத்தில் மத்திய அரசின் செயல்பாடு மிகவும் மோசமாக உள்ளது. கண்டனத்துக்குரியது. முதல்-அமைச்சரே, பிரதமரை நேரில் சந்தித்து ரூ.15 ஆயிரம் கோடி கேட்டு இருக்கிறார். இதில் முதற்கட்டமாக ரூ.5 ஆயிரம் கோடி கொடுத்து இருக்கலாம். ஆனால் ரூ.352 கோடி கொடுத்திருக்கிறார்கள். கேட்பது மலை அளவு கொடுப்பது எலுமிச்சை பழ அளவு போல் உள்ளது. தமிழ்நாட்டின் நிதியை வாங்கி தருவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் ஜனநாயக ரீதியில் கையாளுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #MinisterJayakumar
    தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பி ஓ.ராஜா அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார். #ADMK #ORaja
    சென்னை:

    தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பி ஓ.ராஜா அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார். இதுதொடர்பாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-


    அ.தி.மு.க.வின் கொள்கை - குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும்  வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால், தேனி மாவட்டத்தை சேர்ந்த பெரியகுளம் நகர மன்ற முன்னாள் தலைவர் ஓ. ராஜா இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

    கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது எனக்கேட்டுகொள்கிறோம்

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ADMK #ORaja #EPS #OPS
    ×