search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐஎஸ்சி"

    இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் கவுன்சில் (சிஐஎஸ்சிஇ) நடத்தும் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. #ICSEResult #ISCResult #CISCE
    புதுடெல்லி:

    இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் கவுன்சில் (சிஐஎஸ்சிஇ) நடத்தும் ஐசிஎஸ்இ (10ஆம் வகுப்பு) பொதுத்தேர்வு கடந்த பிப்ரவரி 26 முதல் மார்ச் 28 வரை நடைபெற்றது. ஐஎஸ்சி (12ஆம் வகுப்பு) பொதுத்தேர்வு பிப்ரவரி 4ம் தேதி தொடங்கி மார்ச் 25ம் தேதி வரை நடைபெற்றது. விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்த நிலையில், இன்று தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. https://www.cisce.org என்ற சிஐஎஸ்சிஇ அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம்.

    இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில், இதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் பதிவெண் மற்றும் குறியீட்டு எண்ணை பதிவு செய்து தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.

    10ம் வகுப்பு ஐசிஎஸ்இ தேர்வில் மும்பையைச் சேர்ந்த ஜுகி ரூபேஷ் கஜாரியா, முக்த்சாரைச் சேர்ந்த மன்ஹர் பன்சால் ஆகியோர் 99.60 சதவீத மதிப்பெண்களுடன் முதலிடத்தை பிடித்துள்ளனர். 12ம் வகுப்பு ஐஎஸ்சி தேர்வில் 100 சதவீத மதிப்பெண்களுடன் கொல்கத்தாவின் தேவாங் குமார் அகர்வால், பெங்களூருவின் விபா சுவாமிநாதன் ஆகியோர் முதலிடம் பிடித்துள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    விடைத்தாள் மறுகூட்டல் மற்றும் மறு ஆய்வுக்கு உடனடியாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. #ICSEResult #ISCResult #CISCE
    ×