என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏடிஎம் எந்திரம் தீ"

    • மக்கள் காஞ்சிபுரம் தீயணைப்பு நிலையத்துக்கும், போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர்.
    • காஞ்சிபுரம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலம் அருகே உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, வேதாச்சலம் நகர் பகுதியில் ஏ.டி.எம்.மையம் உள்ளது.

    வாடிக்கையாளர் ஒருவர் எந்திரத்தில் பணம் எடுத்துக்கொண்டு இருந்தபோது ஏ.டி.எம்.எந்திரத்தின் பின்பகுதியில் இருந்து கரும்புகை வந்தது.

    சிறிது நேரத்தில் தீ மள,மளவென எந்திரம் முழுவதும் பரவி பற்றி எரியத்தொடங்கியது.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர் அலறியடித்து ஏ.டி.எம். மையத்தில் இருந்து வெளியேவந்தார்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் காஞ்சிபுரம் தீயணைப்பு நிலையத்துக்கும், போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீணை அணைத்தனர். ஏ.டி.எம்.மின் பின்புறம் முழுவதும் எரிந்து நாசமானது. மின் இணைப்பில் ஏற்பட்ட கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது.

    இந்த தீவிபத்தில் ஏ.டி.எம். எந்திரத்தின் உள்ளே இருந்த லட்சக்கணக்கான பணம் தப்பியது.

    இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஏ.டி.எம். எந்திரத்தை கியாஸ் கட்டர் மூலம் உடைக்கும் முயற்சியில் மர்ம மனிதர்கள் ஈடுபட்டனர்.
    • அப்போது திடீரென ஏ.டி.எம் எந்திரம் தீப்பிடித்து எரிய தொடங்கியது.

    புனே:

    மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகில் உள்ள கூட்லவாடி என்ற இடத்தில் ஏ.டி.எம் மையம் உள்ளது. சம்பவத்தன்று இரவு இந்த மையத்துக்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம மனிதர்கள் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராவை கருப்பு பெயிண்ட் அடித்து மறைத்தனர்.

    பின்னர் ஏ.டி.எம். எந்திரத்தை கியாஸ் கட்டர் மூலம் உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது திடீரென ஏ.டி.எம் எந்திரம் தீப்பிடித்து எரிய தொடங்கியது.

    இதில் எந்திரத்தில் இருந்த 3 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் எரிந்து சேதமானது. இதனால் பயந்து போன மர்ம ஆசாமிகள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதுபற்றி அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

    இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம மனிதர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    ×