search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊராட்சி மன்ற கூட்டம்"

    • கிராம ஊராட்சி மன்ற சாதாரண கூட்டம் தலைவர் அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது.
    • ஜல்ஜீவன் திட்டத்தில், குளறுபடிகள் உள்ளதாக துணைத்தலைவர் ஆட்சேபனை தெரிவித்தார்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் கிராம ஊராட்சி மன்ற சாதாரண கூட்டம் தலைவர் அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தார். செயலாளர் தங்கராஜ் வரவேற்றார்.

    ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.இந்தக் கூட்டத்தில், தொட்டம்பட்டி காலனி பகுதியில் சாலையோர பூங்கா அமைப்பது. லட்சுமி நகர் தரைப்பாலத்தில் குழாய்கள் அமைத்து சிறிய பாலம் அமைப்பது, கிருஷ்ணாபுரம் ஆரம்பப்பள்ளி, மாதப்பூர் காலனி பகுதி, கள்ளகிணறு காலணி பகுதி, தொட்டம்பட்டி அங்கன்வாடி பள்ளி ஆகிய இடங்களில் சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி அமைத்து குடிநீர் வினியோகம் செய்வது உள்ளிட்ட 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக ஜல்ஜீவன் திட்டத்தில், குளறுபடிகள் உள்ளதாக துணைத்தலைவர் பாலசுப்ரமணியம் ஆட்சேபனை தெரிவித்தார்.

    • மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ் தலைமை தாங்கினார்.
    • மாவட்ட கலெக்டர் நிர்வாக அனுமதி வழங்கப்பட்ட பணிக்கு இறுதி பட்டியல் வழங்கமைக்கு மன்ற அங்கீகாரம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சி மன்ற கூட்டம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நகராட்சி தலைமையில் நடைபெற்றது.

    மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சி மாநில நிதி குழு மாநில திட்டத்திற்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு பணிகள் முடிவுற்று முடிவு பட்டியல் வர பெற்றமைக்கு நிதி விடுவிக்கப்பட்டமைக்கு மன்றத்தின் அங்கீகாரம் கோருதல், மாநில நிதி குழு மானியம் கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சி 2019-2020 ஆண்டுக்கான சிறு பாசன ஏரிகள் குளங்கள், ஊரணிகள் ஆகியவைகளை புனரமைக்கும் சிறப்பு திட்டம் மாவட்ட கலெக்டர் நிர்வாக அனுமதி வழங்கப்பட்ட பணிக்கு இறுதி பட்டியல் வழங்கமைக்கு மன்ற அங்கீகாரம்.

    மேலும் கழிவுநீர் கால்வாய் அமைத்தால், ஆழ்துளை கிணறு அமைத்தல், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்தல் உள்ளிட்ட திட்டங்களுக்கு மன்றத்தின் அங்கீகாரம் கோருதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் அனைத்து மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    ×