search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளநீர் விற்பனை"

    நாகர்கோவிலில் கோடைகாலம் போல இப்போதே வெயில் கொளுத்துவதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த மாதம் தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்தது. இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்ததால் அணைகளுக்கு அதிக அளவு நீர்வரத்து இருந்தது. மேலும் குளம் போன்ற நீர்நிலைகளும் பெரும்பாலும் நிரம்பி விட்டன.

    இந்த நிலையில் படிப்படியாக மழை குறைந்து வந்தது. தற்போது கடந்த 10 நாட்களுக்கு மேலாக மாவட்டத்தில் மழை பெய்யாத சூழ்நிலை உள்ளது. மழை குறைந்ததால் வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. கடந்த சில நாட்களாக கோடை காலம் போல வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் காலை நேரத்திலேயே உச்சிநேரம் போல வெயில் கொளுத்துகிறது. இன்றும் நாகர்கோவில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.

    அதிக வெயில் காரணமாக சாலைகளில் பொதுமக்களின் நடமாட்டமும் குறைந்துவிட்டது. அத்தியாவசிய பணிக்காக வெளியில் செல்பவர்கள் குடை பிடித்த படி சென்றனர். மேலும் சாலையோரங்களில் வெப்பத்தை தணிக்கும் வகையில் பழச்சாறு கடைகளும் ஆங்காங்கே உருவாகி உள்ளன. ஆரஞ்சு பழம் மற்றும் மாதுளம் பழச்சாறுகள் அதிகளவு இந்த கடைகளில் விற்கப்படுகிறது. இதே போல கரும்புச்சாறு, குளிர்பான கடைகளிலும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. ஆங்காங்கே நுங்குகளும் குவித்து விற்பனை செய்யப்படுகிறது.

    இளநீர் விற்பனையும் அதி அளவு நடைபெறுகிறது. ஒரு இளநீர் சராசரியாக ரூ.40 வரை விற்பனை ஆகிறது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் இளநீரை அதிகம் குடித்து வருகிறார்கள். கோடைகாலம் போல இப்போதே வெயில் கொளுத்துவதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

    வெயிலின் தாக்கம் காரணமாக சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியிலும் சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறைந்து விட்டது.
    ×