search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலங்கை தென்ஆப்பிரிக்கா ஒருநாள் தொடர்"

    மேத்யூஸ், டிக்வெல்லா, குசால் மெண்டிஸ் ஆட்டத்தால் தென்ஆப்பிரிக்காவிற்கு 300 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இலங்கை. #SLvSA
    இலங்கை - தென்ஆப்பிரிக்கா இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது. டிக்வெல்லா, உபுல் தரங்கா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தரங்கா 19 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த குசால் பெரேரா 8 ரன்னில் வெளியேறினார்.



    ஆனால் தொடக்க வீரர் டிக்வெல்லா சிறப்பாக விளையாடி 43 ரன்கள் சேர்த்தார். குசால் மெண்டிஸ் 38 ரன்களும், தனஞ்ஜெயா டி சில்வா 30 ரன்களும் எடுத்து வெளியேறினார்கள். ஆனால் கேப்டன் மேத்யூஸ் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    கடைசி வரை நின்று மேத்யூஸ் 97 பந்தில் 97 ரன்கள் அடிக்க இலங்கை 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 299 ரன்கள் குவித்தது. பின்னர் 300 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா களம் இறங்க இருக்கிறது.
    தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2-வது நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இரண்டு பேர் அறிமுகமாகியுள்ளனர். #SLvSA
    இலங்கை - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்கா அசத்தல் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் தம்புல்லாவில் 2-வது ஒருநாள் போட்டி இன்று மதியம் இரண்டரை மணிக்கு தொடங்குகிறது. இதில் இலங்கை டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.



    இலங்கை அணியில் பிரபாத் ஜெயசூர்யா, கசுன் ரஜிதா ஆகியோர் அறிமுகமாகியுள்ளனர்.

    தென்ஆப்பிரிக்கா அணி விவரம்:-

    1. ஹசிம் அம்லா, 2. டி காக், 3. மார்கிராம், 4. டு பிளிசிஸ், 5. டுமினி, 6. டேவிட் மில்லர், 7. முல்டர், 8. பெலுக்வாயோ, 9. ரபாடா, 10. ஷம்சி, 11. நிகிடி
    இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டுமினி, டு பிளிசிஸ் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. #SLvSA
    இலங்கை - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தம்புல்லாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இலங்கை ரபாடா (4) மற்றும் ஷம்சி (4) ஆகியோரின் அபார பந்து வீச்சால் 34.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 193 ரன்னில் சுருண்டது.

    பின்னர் 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா களம் இறங்கியது. அம்லா, டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். அம்லா 19 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.



    அடுத்து வந்த மார்கிராம் தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். இதனால் தென்ஆப்பிரிக்கா 31 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுக்களை இழந்தது.

    அடுத்து டி காக் உடன் கேப்டன் டு பிளிசிஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அணியின் ஸ்கோர் 117 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. டி காக் 59 பந்தில் பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.



    டு பிளிசிஸ் 56 பந்தில் 10 பவுண்டரியுடன் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டுமினி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 32 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 53 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்க 31 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்து ஐந்து விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.

    இரு அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டி ஆகஸ்ட் 1-ந்தேதி நடக்கிறது.
    முதல் ஒருநாள் போட்டியில் ரபாடா மற்றும் ஷம்சி ஆகியோரின் அபார பந்து வீச்சால் இலங்கை அணி 193 ரன்னில் ஆல்அவுட் ஆனது. #SLvSA #Rabada
    இலங்கை - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் தம்புல்லாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி இலங்கை அணியின் டிக்வெல்லா, உபுல் தரங்காக ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இங்கினார்கள். டிக்வெல்லா 2 ரன்கள் எடுத்த நிலையில் ரபாடா பந்தில் ஆட்டமிழந்தார். தரங்கா 10 ரன்னில் ரன்அவுட் ஆனார்.


    குசால் பேரேரா

    அடுத்து வந்த குசால் மெண்டிஸ் 3 ரன்னில் ரபாடா பந்தில் வெளியேறினார். 4-வது வீரராக களம் இறங்கிய குசால் பேரேரா தாக்குப்பிடித்து விளையாட, கேப்டன் மேத்யூஸ் 5 ரன்னிலும், ஜெயசூர்யா ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். இதனால் இலங்கை 36 ரன்னுக்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்தது திணறியது.

    6-வது விக்கெட்டுக்கு குசால் பெரேராவுடன், ஆல்ரவுண்டர் திசார பெரேரா ஜோடி ஜோடி சேர்ந்தது. இந்த ஜோடி தாக்குப்பிடித்து விளையாடியது. குசால் பெரேரா 81 ரன்களும், திசாரா பெரேரா 49 ரன்களும் எடுக்க இலங்கை அணி 34.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 193 ரன்னில் சுருண்டது.



    ரபாடா 8 ஓவரில் 41 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டும், ஷம்சி 8.3 ஓவரில் 33 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா பேட்டிங் செய்து வருகிறது. இந்த அணி 6 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 37 ரன்கள் எடுத்துள்ளது.
    ஐந்து போட்டிகள் கொண்ட தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. #SLvSA
    இலங்கை - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்றுடன் முடிவடைந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இலங்கை 2-0 என வெற்றி பெற்று தென்ஆப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்தது.

    ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற 29-ந்தேதி நடக்கிறது. இதற்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆல்ரவுண்டர் மேத்யூஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இலங்கை அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. மேத்யூஸ் (கேப்டன்), 2. தசுன் ஷனாகா, 3. குசால் பெரேரா, 4. தனஞ்ஜெயா டி சில்வா, 5. உபுல் தரங்கா, 6. குசால் மெண்டிஸ், 7. திசாரா பெரேரா, 8. நிரோஷன் டிக்வெல்லா, 9. சுரங்கா லக்மல், 10. ரஹிரு குமாரா, 11. கசுன் ரஜிதா, 12. அகிலா தனஞ்ஜெயா, 13. பி ஜெயசூர்யா, 14. லக்‌ஷ்மண் சண்டகன், 15. எஸ் ஜெயசூர்யா.
    ×