search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இருளர் இன மக்கள்"

    • அதிகாரி நேரில் ஆய்வு
    • தற்காலிக முகாம் அமைக்கப்பட்டுள்ளது

    ராணிப்பேட்டை:

    காவேரிப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட உத்தரம்பட்டு ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் தற்காலிக முகாம் அமைக்கப்பட்டு இருளர் இன மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கலெக்டர் வளர்மதி, மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், திட்ட இயக்குனர் லோகநாயகி, தாசில்தார் பாலச்சந்தர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சையப்புதீன், வெங்கடேசன் ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன், கிராம நிர்வாக அலுவலர் பூபாலன், ஊராட்சி செயலாளர் சங்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • இருளர் இன மக்கள் காலம் காலமாக வாழ்ந்து வருகின்றனர்.
    • மாணவர்கள் பாதியிலேயே பள்ளி படிப்பை நிறுத்தி விடும் அவல நிலை உள்ளது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, கல்லாவி பனமரத்துப்பட்டி காந்திநகர் பகுதியில் இருளர் இன மக்கள் காலம் காலமாக வாழ்ந்து வருகின்றனர்.

    இங்கு, 26 வீடுகளில் 70-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இக்கிராமத்தில் அடிப்படை வசதிகளான குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதி, கழிப்பிட வசதி, மயானத்திற்கு செல்லும் சாலை உள்ளிட்ட அடிப்படை தேவைகள் இன்றி தவித்து வருகின்றனர்.

    அப்பகுதியைச் சேர்ந்த பாரதி என்ற பெண் கூறுகையில், சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகளில் வாழ்ந்து வருகிறோம். ஒவ்வொரு வீட்டிலும் 2 முதல் 4 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். வீட்டின் மேற்கூரைகள் மிகவும் மோசமான நிலையில் பெயர்ந்து விழுகிறது. மழைக்காலங்களில் வீடுகளில் தண்ணீர் ஒழுகுவதால், இரவு முழுவதும் தூங்காமல் கிடக்க வேண்டிய அவல நிலை உள்ளது. தங்கள் கிராமத்திற்கு செல்ல, சாலை வசதி இல்லாமலும்,போதிய குடிநீர் இன்றி தவித்து வருகிறோம். இதனால், சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் சென்று குடிநீர் எடுத்து வரும் அவல நிலை உள்ளது. பிள்ளைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு, ஜாதிச்சான்று கேட்பதால், இதுவரை சேர்க்க முடியாத நிலை உள்ளது எனவும், ஒரு சில மாணவர்கள்9-ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர்.மேற்படிப்பு படிக்க, ஜாதிசான்றிதழ் இல்லாததால், மாணவர்கள் பாதியிலேயே பள்ளி படிப்பை நிறுத்தி விடும் அவல நிலை உள்ளது.

    நாங்கள் காட்டுக்குச் சென்று, விறகு வெட்டி கொண்டு வந்து விற்று வாழ்ந்து வருகிறோம். கிடைக்கும் கூலித் தொழிலுக்கு சென்று வாழ்க்கை நடத்தி வருகிறோம், நிரந்தரமான தொழில் இல்லாமல் குழந்தைகளின் எதிர்காலமும் கேள்விக்குறியாக உள்ளது என்று கூறினார்.

    தமிழக அரசு, இருளர் இன மக்களின் வாழ்வாதாரத்தை காக்க, ஜாதி சான்றிதழ் மற்றும் அடிப்படை தேவைகளையாவது நிறைவேற்றி தர வேண்டும் என, பகுதி இருளர் இன மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×