search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இமானுவல் மேக்ரான்"

    • உக்ரைன் போர் குறித்து ரஷிய அதிபர் புதினிடம் பிரதமர் மோடி கவலை தெரிவித்தார்.
    • உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு குறித்த பிரதமர் மோடியின் கருத்தை பிரான்ஸ் அதிபர் ஆதரித்துள்ளார்.

    நியூயார்க்:

    ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட் நகரில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இந்திய பிரதமர் மோடி, மாநாட்டுக்கு இடையே உலக நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசினார்.

    அந்த வகையில் ரஷிய அதிபர் புதினை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது இரு தரப்பு விவகாரங்கள் உள்பட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் பேசினர்.

    உக்ரைன் மீது ரஷியா படையெடுத்த பிறகு புதினும் மோடியும் நேருக்கு நேர் முதல் முறையாக சந்தித்தனர். அந்த சந்திப்பின்போது, இது போருக்கான காலம் அல்ல என உக்ரைன் போர் குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்தார்.

    இந்நிலையில், ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 77-வது கூட்டத்தில் பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    போருக்கும் பழிவாங்கலுக்கும் இது நேரமில்லை என இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியது சரியே.

    மேற்குக்கு எதிராக பழிவாங்கவோ அல்லது கிழக்கிற்கு எதிராக மேற்கத்தை எதிர்ப்பதற்கோ அல்ல. நாம் எதிர்கொள்ளும் சவால்களை நமது இறையாண்மை சமத்துவ நாடுகள் ஒன்றிணைந்து சமாளிக்க வேண்டிய நேரம் இது என தெரிவித்தார்.

    ×