search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய மீனவர்கள் கைது"

    நல்லெண்ணத்தின் அடிப்படையில் 2வது முறையாக 100 இந்திய கைதிகளை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. #Pakistanreleases #Indianfishermen #goodwillgesture
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக கூறி இந்திய மீனவர்களை பாகிஸ்தான் சிறைபிடித்து ஜெயிலில் அடைத்து உள்ளது. அந்த வகையில் 360 மீனவர்கள் பாகிஸ்தான் சிறைகளில் நீண்டநாட்களாக அடைக்கப்பட்டுள்ளனர். காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஸ்-இ- முகமது பயங்கவரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில் 40 துணை ராணுவப்படையினர் பலியானார்கள். இந்த சம்பவத்தினால் இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவியது.

    இந்த பதற்றத்தை தணிக்கும் வகையிலும் நல்லெண்ண அடிப்படையிலும் பாகிஸ்தான் சிறையில் உள்ள 360 இந்திய மீனவர்கள் 4 கட்டமாக விடுவிக்கப்படுவார்கள் என பாகிஸ்தான் அறிவித்தது.

    அதன்படி முதல் கட்டமாக கடந்த 7-ந்தேதி 100 மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். தற்போது பாகிஸ்தானின் மாலிர் ஜெயிலில் உள்ள 100 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் விடுதலை செய்துள்ளது. அவர்கள் ரெயில் மூலம் லாகூர் கொண்டுவரப்பட்டு வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் இன்று (திங்கட்கிழமை) ஒப்படைக்கப்படுவார்கள்.   #Pakistanreleases #Indianfishermen #goodwillgesture
    நல்லெண்ணத்தின் அடிப்படையில் 360 இந்திய கைதிகளை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் அரசு அறிவித்ததில் முதல்கட்டமாக இன்று 100 பேர் விடுதலையாகினர். #Pakistanreleases #Indianfishermen #goodwillgesture
    இஸ்லாமாபாத்:

    அரபிக்கடலுக்குள் எல்லை தாண்டி மீன் பிடிக்க செல்லும் இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படையினரால் பிடிக்கப்பட்டு, அவர்கள் அங்குள்ள சிறைகளில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.
     
    இரு நாட்டு தூதரகங்கள் செய்து கொண்ட உடன்படிக்கையின்படி நல்லெண்ண அடிப்படையில் மீனவர்கள் விடுதலை செய்யப்படுவது வழக்கம்.

    இந்நிலையில், பாகிஸ்தான் சிறைகளில் உள்ள 360 இந்திய மீனவர்கள் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்பட உள்ளனர் என அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் முஹம்மது பைசல் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தார்.

    ஏப்ரல் 8-ம் தேதி 100 கைதிகளும், 15-ம் தேதி 100 கைதிகளும், 22-ம் தேதி 100 கைதிகளும், 29-ம் தேதி 60 கைதிகளும் விடுதலை செய்யப்படுவார்கள் என அவர் குறிப்பிட்டிருந்தார். இவர்களில் 355 மீனவர்கள் மீதி 5 பேர் தவறுதலாக இந்திய எல்லையை கடந்து சென்று பிடிப்பட்டவர்கள் என  அவர் குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், முதல்கட்டமாக கராச்சி சிறையில் இருந்து இன்று 100 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். 

    அவர்கள் அனைவரும் கராச்சியில் இருந்து அல்லாமா இக்பால் ரெயில் மூலம் லாகூர் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். லாகூரில் இருந்து சாலை மார்க்கமாக வாகா எல்லைப்பகுதியில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள்.

    இப்படி விடுதலையாகும் கைதிகள் இந்தியா சென்று சேர்வதற்கு தேவையான ஏற்பாடுகள் மற்றும் அவர்களுக்கான உணவு, உடை ஆகிய உதவிகளை பாகிஸ்தானில் உள்ள ஈதி என்ற தொண்டு நிறுவனம் தொடர்ந்து செய்து வருவது குறிப்பிடத்தக்கது. #Pakistanreleases #Indianfishermen #goodwillgesture
    பாகிஸ்தான் கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக இந்தியாவை சேர்ந்த 22 மீனவர்களை அந்நாட்டின் கடலோர காவல் படையினர் கைது செய்தனர்.
    இஸ்லாமாபாத்:

    அராபிய கடலில் மீன் பிடிக்கும்போது தங்கள் நாட்டு எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக இந்தியா  மற்றும் பாகிஸ்தான் கடற்படையினர் எதிர்நாட்டை சேர்ந்த மீனவர்களை கைது செய்வது தொடர்ந்து வருகிறது.

    அவ்வகையில், கடந்த அக்டோபர் மாதம் மற்றும் இந்த மாத துவக்கத்தில் 24 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கைது செய்தது நினைவிருக்கலாம்.

    இந்நிலையில், இந்தியாவில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற 22   மீனவர்களை பாகிஸ்தான் கடலோர காவல் படை கராச்சி அருகேயுள்ள கடல் பகுதியில் நேற்று கைது செய்தனர். அவர்கள் சென்ற 3 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

    கைதான மீனவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து லந்தி கிளைச்சிறையில் அடைத்து வைத்துள்ளனர். இன்று கோர்ட்டில் அவர்கள் ஆஜர்ப்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Pakistanarrests #Indianfishermen #Indianfishermenarrested
    பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக இந்தியாவை சேர்ந்த 18 மீனவர்களை அந்நாட்டு கடலோரக் காவல் படையினர் கைது செய்துள்ளனர். #IndianFishermenArrest
    இஸ்லாமாபாத்: 
     
    அரபுக் கடலில் பாகிஸ்தான் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த 18 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடலோரக் காவல் படையினர் கைது செய்துள்ளதாகவும், அவர்களுக்கு சொந்தமான 2 படகுகள் சிறைப்பிடிக்கப்பட்டது எனவும் அந்நாட்டின் கடலோரக் காவல் படையினர் தெரிவித்தனர். 

    பாகிஸ்தான் கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. #IndianFishermenArrest
    ×