search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நல்லெண்ண அடிப்படையில் 2-வது முறையாக 100 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் விடுவித்தது
    X

    நல்லெண்ண அடிப்படையில் 2-வது முறையாக 100 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் விடுவித்தது

    நல்லெண்ணத்தின் அடிப்படையில் 2வது முறையாக 100 இந்திய கைதிகளை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. #Pakistanreleases #Indianfishermen #goodwillgesture
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக கூறி இந்திய மீனவர்களை பாகிஸ்தான் சிறைபிடித்து ஜெயிலில் அடைத்து உள்ளது. அந்த வகையில் 360 மீனவர்கள் பாகிஸ்தான் சிறைகளில் நீண்டநாட்களாக அடைக்கப்பட்டுள்ளனர். காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஸ்-இ- முகமது பயங்கவரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில் 40 துணை ராணுவப்படையினர் பலியானார்கள். இந்த சம்பவத்தினால் இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவியது.

    இந்த பதற்றத்தை தணிக்கும் வகையிலும் நல்லெண்ண அடிப்படையிலும் பாகிஸ்தான் சிறையில் உள்ள 360 இந்திய மீனவர்கள் 4 கட்டமாக விடுவிக்கப்படுவார்கள் என பாகிஸ்தான் அறிவித்தது.

    அதன்படி முதல் கட்டமாக கடந்த 7-ந்தேதி 100 மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். தற்போது பாகிஸ்தானின் மாலிர் ஜெயிலில் உள்ள 100 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் விடுதலை செய்துள்ளது. அவர்கள் ரெயில் மூலம் லாகூர் கொண்டுவரப்பட்டு வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் இன்று (திங்கட்கிழமை) ஒப்படைக்கப்படுவார்கள்.   #Pakistanreleases #Indianfishermen #goodwillgesture
    Next Story
    ×