search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய கம்யூனிஸ்டு கட்சி பிரச்சாரம்"

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், ஏ.ஐ.டி.யூ.சி.யும் இணைந்து அரசியல் அமைப்புச் சட்டத்தை பாதுகாப்போம், இந்தியாவை பாதுகாப்போம் என்பதை வலியுறுத்தி பிரச்சாரம் நடத்தினர்.
    கிருஷ்ணகிரி:

    அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாப்போம், இந்தியாவை பாதுகாப்போம் என்பதை வலியுறுத்தி கிருஷ்ணகிரியில் பிரச்சாரம் நடந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், ஏ.ஐ.டி.யூ.சி.யும் இணைந்து அரசியல் அமைப்புச் சட்டத்தை பாதுகாப்போம், இந்தியாவை பாதுகாப்போம் என்பதை வலியுறுத்தி பிரச்சார இயக்கத்தை வேலூரில் தொடங்கியது. நேற்று காலை பர்கூரிலும், பிற்பகல் கிருஷ்ணகிரி பழையபேட்டையிலும் இந்த பிரச்சாரம் நடந்தது. 

    கிருஷ்ணகிரியில் நடந்த பிரச்சாரத்திற்கு முன்னாள் எம்எல்ஏ., ராமச்சந்திரன் தலைமை வகித்தார். ஏஐடியூசி மாவட்ட செயலாளர் மாதையன் கோரிக்கை குறித்து பேசினார். 

    இந்த பிரச்சாரத்தின் போது, நூறு ஆண்டுகளாக போராடி தொழிலாளர்கள் பெற்ற உரிமைகள் எல்லாம் பறிக்கப்படுகிறது. ஒவ்வொரு சட்டமாய் பறித்து, எந்த சட்டமும் தொழிலாளிக்கு பொருந்தாது என அண்மையில்ல் அரசு அறிவித்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட காலவேலை முறை என்ற பெயரில் இனி தொழிலாளியை வேலைக்கு நியமிக்கும் போதே ஒரு ஆண்டுக்கு, இரண்டு ஆண்டுக்கு என காலத்தை நிர்ணயித்து நியமிக்கலாம். 

    அந்த காலம் முடிந்ததும் தானாகவே வேலை முடிந்துவிடும் என்ற சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். மேலும் பாரதீய ஜனதாவின் தவறான கொள்கையால் தினமும் ஏறிக்கொண்டிருக்கும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க முடியாத மோடி பதவி விலக வேண்டும். 

    சாராயம் காய்ச்சிய விஜய்மல்லாய்யாவிற்கு ரூ. 9 ஆயிரம் கோடி வங்கி கடன், வைரம் விற்ற நீரவ் மோடிக்கு ரூ. 11 அயிரத்து 400 கோடி வங்கி கடன், பத்து ரூபாய்க்கு பேனா விற்றவனுக்கு கூட ரூ. 4 ஆயிரம் கோடி வங்கி கடன். இந்த கடனை செலுத்தாமல் மத்திய அரசின் துணையுடன் அந்நிய நாடுகளில் ராஜ வாழ்க்கை. 10 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். 

    நாடாளுமன்ற வாசலில் உண்ணாவிரம் இருந்தும் நேரில் பார்க்க ஒரு நிமிட நேரம் கூட ஒதுக்க முடியாத மோடி என்று கோஷங்கள் எழுப்பினர். இதில், மாநில துணை செயலாளர் ஆறுமுகம், மாநில செயற்குழு உறுப்பினர் நஞ்சப்பன், விவசாய சங்க மாநில பொதுச் செயலாளர் துரைமாணிக்கம், மாநில துணைத் தலைவர் தேவதாஸ், தேசிய குழு உறுப்பினர் சேதுராமன், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் திருநாவுக்கரசு, சிவராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
    ×