search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆரேக்கிய சமையல்"

    • பெரும்பலானோர் வீட்டில் காலை உணவு இட்லியாக தான் இருக்கும்.
    • இன்று புதுவகையான இட்லியை செய்து பார்ப்போம்.

    தேவையான பொருட்கள்

    இட்லி அரிசி - 2 கப்

    சர்க்கரை- 3 தேக்கரண்டி

    உளுந்தம் பருப்பு - 3/4 கப்

    தேங்காய் பால் - 3/4 கப்

    உப்பு, தண்ணீர் - தேவையான அளவு

    உலர் ஈஸ்ட் - 1 தேக்கரண்டி

    செய்முறை

    அரிசி மற்றும் உளுந்தப்பருப்பை நன்றாக கழுவி தனித்தனியாக 5 மணி நேரத்திற்கு ஊற வைத்து, அரசி, பருப்பு இரண்டையும் தனித்தனியாக இட்லி மாவிற்கு அரைப்பது போல் அரைத்துக் கொள்ளுங்கள்.

    ஒரு பாத்திரத்தில் தேங்காய் பால் ஊற்றி அதனுடன் அரைத்த 2 மாவையும் ஒன்றாக சேர்த்து கலந்து நன்றாக கலக்கவும்.

    அதனுடன் உப்பு, 2 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து கலந்து, மாவை தனியாக வைக்கவும்.

    சிறிய கிண்ணத்தில் ஈஸ்ட், 1 தேக்கரண்டி சர்க்கரை மற்றும் 1/4 கப் வெதுவெதுப்பான நீரை கலந்து தனியாக வைக்கவும்.

    இந்தக் கலவையை மாவுடன் சேர்ந்து சுமார் 3 மணி நேரம் புளிக்க வைக்கவும்.

    3 மணி நேரம் கழித்து மாவை வாழை இலைகளை கோன் போல் செய்து கொள்ளவும். செய்த கோனை டம்ளர்களில் வைக்கவும். அப்போது மாவு கீழே ஊற்றாது. அந்த கோனில் மாவை ஊற்றி வழக்கம் போல இட்லி சட்டியில் வைத்து மூடி 20 நிமிடங்கள் ஆவியில் வேகவைக்க வேண்டும்.

    வெந்தவுடன் எடுத்து பரிமாறினால் சுவையான தேங்காய் பால் கோன் இட்லி ரெடி.

    இதனுடன் சட்னி,சாம்பார், சிக்கன் குழம்பு வைத்து சாப்பிடும் போது இன்னும் அதிக சுவையாக இருக்கும்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    ×