search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்பு"

    • விமான நிலையத்தின் பிரதான வாயில் அருகே இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
    • இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

    காபூல்:

    ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ராணுவ விமான நிலையத்திற்கு வெளியே இன்று சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. விமான நிலையத்தின் பிரதான வாயில் அருகே இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் குறைந்தது 10 பேர் பலியானதாகவும், 8 பேர் பலத்த காயமடைந்ததாகவும், தலிபான் உள்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் கூறியிருக்கிறார். இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

    ஏற்கனவே தக்கார் மாகாண தலைநகர் தலுக்கான் நகரில் நடந்த குண்டுவெடிப்பில் 4 பேர் உயிரிழந்த  நிலையில், அடுத்த 3 நாட்களுக்குள் மீண்டும் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.

    உள்நாட்டு போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானில் கடந்த சில மாதங்களாக குண்டுவெடிப்பு உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆப்கானிஸ்தானின் ஹெராத் பகுதியில் உள்ள மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் 18 பேர் பலியாகினர்.
    • இந்த தாக்குதலில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் வெளியேறியதை தொடர்ந்து, தலிபான்கள் தங்களது ஆதிக்கத்தை செலுத்தும்விதமாக தாக்குதல் நடத்தி பெரும்பாலான மாகாணங்களை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர்.

    இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் ஹெராட் மாகாணத்தில் உள்ள மசூதியில் நடந்த குண்டு வெடிப்பில் மதகுரு உள்பட 18 பேர் கொல்லப்பட்டதாகவும், 21-க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என தகவல் வெளியானது.

    இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு எந்தக் குழுவும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

    • காபூல் குருத்வாரா மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து ஆழ்ந்த கவலை அடைந்துள்ளோம் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    • குருத்வாரா மீதான கோழைத்தனமான தாக்குதலை அனைவரும் வன்மையாக கண்டிக்க வேண்டும் என வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள கர்தே பர்வான் என்ற பகுதியில் சீக்கிய குருத்வாரா உள்ளது. இங்கு இன்று காலை சீக்கியர்கள் வழிபாடு நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் குருத்வாராவுக்குள் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் குருத்வாராவின் காவலாளி அகமது மற்றும் சீக்கிய பக்தர் ஒருவர் பலியாகினர்.

    குருத்வாரா மீதான தாக்குதலை ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்தி உள்ளதாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், காபூலில் உள்ள கர்தே பர்வான் குருத்வாரா மீது கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதல் நடத்தியதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இந்த தாக்குதலை கண்டிப்பதோடு, பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக பிரார்த்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

    ×