search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆதீனம் தரிசனம்"

    • பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மதுரை ஆதீனம் தரிசனம் செய்தார்.
    • இங்கு வந்தால் மனம் அமைதியாக உள்ளது. தியானம் செய்ய சிறந்த இடமாக இருக்கிறது என்றார்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் கோவில் அமைந்துள்ளது. இங்கு மதுரை ஆதீன மடத் தின் 293-வது சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம் பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து தரிசனம் செய்தார்.

    பிறகு தேவரின் இல்லம், பழமையான பாராட்டு பட்டயங்கள், புகைப்பட கண்காட்சி, தேவர் பூஜை அறை ஆகியவற்றை பார் வையிட்டார். அப்போது அவர் கூறுகையில், ஒவ் வொரு ஆண்டும் தேவர் ஜெயந்தி விழாவிற்கு பசும் பொன் வருவது வழக்கம். கே.வேப்பங்குளம் கிரா மத்தில் நடைபெற்ற கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு வருகை தந்தேன். அதோடு பசும்பொன் தேவர் வாழ்ந்த வீடு, அனைத்தையும் பார்க்க வேண்டும் என நினைத்து வந்துள்ளேன்.

    இங்கு வந்தால் மனம் அமைதியாக உள்ளது. தியானம் செய்ய சிறந்த இடமாக இருக்கிறது. பசும் பொன் தேவருக்கும், மதுரை ஆதீ னத்துக்கும் நீண்ட நெடிய தொடர்புண்டு. தேவர் ஒரு தெய்வப்பிறவி. சித்தராக வாழ்ந்தவர். உலகில் இன்று நடக்கும் பல்வேறு நிகழ்வு களை அவர் வாழ்ந்த காலத் திலே நடந்துள்ளது.

    அப்படிப்பட்ட மாபெரும் மகான் அவதரித்த இந்த புண்ணிய பூமி பசும்பொன் கிராமத்திற்கு நாம் அனைவ ரும் வரவேண்டும், வழிபாடு செய்ய வேண்டும். இன்றைய இளைஞர்கள் தேவருடைய கொள்கையையும், அவர் பின்பற்றிய சித்தாந்தத்தை யும், அரசியலையும் அனை வரும் பின்பற்ற வேண்டும். இந்த வருடமும் தேவர் ஜெயந்தி விழாவிற்கு வரு வேன் என்றார்.

    அவருடன் மாமன்னர் பூலித்தேவர் மக்கள் கழகத்தின் தலைவர் பெருமாள்சாமி, பசும்பொன் ரத்ததான அறக்கட்டளை சமூக சேவகர் கண்ணன், அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாணவர் அணி மத்தியக் குழு உறுப்பினர் மு.வெள்ளைப்பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.

    ×