search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆதிதிராவிட மாணவர்கள்"

    • ஒன்றியஅரசின் சுற்றுலா துறையின் கீழ் செயல்படும் ஒரு தன்னாட்சி கல்வி நிறுவனம் .
    • ஒன்றரை ஆண்டு உணவு தயாரிப்பு பட்டயப்படிப்பும் பயிற்றுவிக்கப்படுகிறது.

    திருப்பூர் :

    தாட்கோ மூலமாக 10- ம்வகுப்பு மற்றும் 12-ம்வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு B.Sc (Hospitality -amp, HotelAdministration) மூன்று வருட முழு நேர பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்புசேர்ந்து படித்திடவும், படிப்பு முடிந்தவுடன் வேலைவாய்ப்பிற்கு வாழ்வாதாரத்தினைமேம்படுத்திக் கொள்ள கட்டணமில்லாமல் அளிக்கப்படுகிறது.

    சென்னை தரமணியிலுள்ள இன்ஸ்ட்டியூட் ஆப் ஓட்டல் மேனேஜ்மென்ட்கேட்டரிங் டெக்னாலஜி அண்ட் அப்ளைய்டு நியுட்ரிஷயன் நிறுவனமானது ஒன்றியஅரசின் சுற்றுலா துறையின் கீழ் செயல்படும் ஒரு தன்னாட்சி கல்வி நிறுவனம் .சர்வதேசஅங்கீகாரம் பெற்ற இந்நிறுவனத்தில் 12-ம் வகுப்பு முடித்தவர் ஆதிதிராவிடர் மற்றும்பழங்குடியின இனத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு பி.எஸ்சி இளநிலை பட்டப்படிப்பும்,ஒன்றரை ஆண்டு உணவு தயாரிப்பு பட்டயப்படிப்பும் பயிற்றுவிக்கப்படுகிறது. அதேபோன்று பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஒன்றரை ஆண்டு காலை உணவு தயாரிப்பு மற்றும் பதனிடுதல் படிப்பும் வழங்கப்படுகிறது.

    இதில் சேர விரும்பும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தமாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு மற்றும் 12-ம்வகுப்பில்குறைந்தது 45 சதவீதம் மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆரம்பகாலபி.எஸ்சி படிப்பில் சேருவதற்கு தேசிய தேர்வு முகமை சார்பில் நடத்தப்படும் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் .அத்தேர்வுக்கான பயிற்சி தாட்கோ மூலம் வழங்கப்படும்.தேர்வுக்கு வரும் 27.4.2023-ந் தேதிக்குள் விண்ணப்பித்தல் அவசியம்.

    இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புவோர் www.tahdco.com என்ற இணையத்தில்பதிவு செய்ய வேண்டும். எனவே திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் இதுகுறித்து மேலும் தகவல்களை அறிய திருப்பூர் தாட்கோ மாவட்ட மேலாளரை நேரிலோஅல்லது தொலைபேசியிலோ 044-2971112 அனுகி தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார். 

    • இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.
    • தபால்காரர்கள், கிராம அஞ்சல் ஊழியரை தொடர்பு கொண்டு வங்கிக்கணக்கு தொடங்கலாம்.

    திருப்பூர் :

    ஆதிதிராவிடர் நலத்துறையின் கல்வி உதவித்தொகை பெற வசதியாக அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியுடன் இணைந்து அந்தந்த பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக்கணக்கு தொடங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் 9 ஆயிரத்து 302 மாணவர்களுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லாமல் இருந்தது. கடந்த 10 நாட்களாக பள்ளிகளில் நடந்தப்பட்ட சிறப்பு முகாம்கள் மூலமாக 2 ஆயிரத்து 157 மாணவர்களுக்கு இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 7 ஆயிரத்து 145 மாணவர்களுக்கு வருகிற 25-ந் தேதிக்குள் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக்கணக்கு தொடங்கப்பட வேண்டும்.

    பள்ளிகளில் நடக்கும் சிறப்பு முகாம்கள் மட்டுமில்லாமல் அருகில் உள்ள தபால் நிலையங்கள், தபால்காரர்கள், கிராம அஞ்சல் ஊழியரை தொடர்பு கொண்டு வங்கிக்கணக்கு தொடங்கலாம். தபால்காரர்கள், கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தின் மூலமாக மாணவர்களின் ஆதார் எண், செல்போன் எண்ணை பயன்படுத்தி விரல் ரேகை மூலம் வங்கிக்கணக்கு தொடங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×