search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிரியர் முன்னேற்ற சங்கம்"

    • தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தினர்.
    • ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் சுமார் 850 பெண் ஆசிரியர்கள், 620 ஆண் ஆசியர்கள் என மொத்தம் 1470 ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பள்ளிக்கு சென்றோம்.

    ராமநாதபுரம்

    தூத்துக்குடி மாவட்டம் கீழ்நம்பிபுரம் இந்து தொடக்கபள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியரை மாணவரின் பெற்றோர் பள்ளியில் புகுந்து தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர் கருப்பு பேட்ஜ் அணிந்து பள்ளிக்கு சென்றனர். இதுகுறித்து ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்டத்தலைவரும், ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான முருகேசன் கூறியதாவது:-

    தூத்துக்குடி மாவட்டம் கீழ்நம்பிபுரத்திலுள்ள இந்து தொடக்கப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் தவறு செய்த மாணவனை கண்டித்தார். இதையொட்டி அந்த மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்குள் புகுந்து ஆசிரியரை தாக்கியுள்ளனர். இந்த பள்ளியின் தலைமையாசிரியரை பெண் என்றும் பாராமல் கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த செயல் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஆசிரியர் மீது தவறு இருந்தால் கூட அவருக்கு தண்டனை கொடுக்க பள்ளிக்கல்வித்துறை இருக்கிறது. அதைவிடுத்து புனிதமாக கருதும் பள்ளியில் புகுந்து ஆசிரியரை தாக்குவது அராஜக செயல் இப்படிப்பட்ட செயலுக்கு காவல்துறை தகுந்த தண்டனையை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

    பள்ளியில் புகுந்து ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தியவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி மாநிலத்தலைவர் தியாகராஜன் வழிகாட்டுதலின்படி ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் சுமார் 850 பெண் ஆசிரியர்கள், 620 ஆண் ஆசியர்கள் என மொத்தம் 1470 ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பள்ளிக்கு சென்றோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×