search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி"

    கோவை பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்திக்கு 2 நாட்கள் போலீஸ் காவல் விதித்து கோவை போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    கோவை:

    கோவையில் பாலியல் தொல்லை காரணமாக பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

    இது தொடர்பாக கோவை மேற்கு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    மேலும் மாணவி புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத குற்றத்திற்காக பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனும் கைது செய்யப்பட்டார்.

    இந்த நிலையில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியால் வேறு எந்த மாணவியும் பாதிக்கப்பட்டுள்ளனரா? என்பது பற்றி விசாரிக்க போலீசார் முடிவு செய்தனர்.

    இதற்காக 5 நாள் காவல் கேட்டு கோவை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள போக்சோ கோர்ட்டில் போலீசார் மனுதாக்கல் செய்திருந்தனர்.

    இந்த மனு மீதான விசாரணை இன்று காலை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குலசேகரன், மிதுன் சக்கரவர்த்தியை 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

    இதையடுத்து போலீசார் அவரை கோர்ட்டில் இருந்து பலத்த பாதுகாப்புடன் வெளியே அழைத்து வந்தனர். பின்னர் அவரை வேனில் ஏற்றி சென்று ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    முன்னதாக இந்த வழக்கில் கைதான பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் தனக்கு ஜாமீன் வழங்ககோரி கோவை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள போக்சோ கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி, பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மீரா ஜாக்சன் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் மேற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். மேலும் இறந்த மாணவியின் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிதி வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இதையடுத்து பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார்.


    கோவை பள்ளி மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் பேனர் வைத்ததாக கவுதம் என்பவர் மீது கோவை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
    கோவை:

    கோவையை சேர்ந்த 17 வயது மாணவி ஆசிரியரின் பாலியல் தொல்லையால் கடந்த சில நாட்களுக்கு முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் தற்கொலைக்கு நீதி கேட்டு பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்தநிலையில் மாணவி சாவுக்கு நீதி கேட்டு கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் பேனர் வைத்ததாக கவுதம் என்பவர் மீது கோவை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதேபோல உக்கடம் பெருமாள் கோவில் வீதி பகுதியிலும், ஈஸ்வரன் கோவில் வீதி பகுதியிலும் மாணவி சாவுக்கு நீதி கேட்டு பேனர் வைத்ததாக தமிழ்நாடு ஆரிய வைசிய சங்கம் மீது உக்கடம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    மாணவியின் பெயர் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
    சில மனித மிருகங்களின் வக்கிரமும் வன்மமும் ஒரு உயிரைப் பறித்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
    சென்னை:

    கோவையில் பள்ளி ஆசிரியரின் பாலியல் தொல்லை தாங்க முடியாமல் பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் மாணவிக்கு பாலியல் தொல்லை, தற்கொலைக்கு தூண்டியதாக ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    கோவை மாணவியின் மரணம் மனதை வருந்தச் செய்துள்ளது. சில மனித மிருகங்களின் வக்கிரமும் வன்மமும் ஒரு உயிரைப் பறித்துள்ளது. பாலியல் வன்செயல்கள் நடக்காமல் பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும். குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம்; பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்!

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    மாணவியின் தற்கொலைக்கு நீதி கேட்டு மாணவர்கள் கருப்பு சட்டை அணிந்து அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிணவறை முன்பு பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கோவை:

    கோவையில் பள்ளி ஆசிரியரின் பாலியல் தொல்லை தாங்க முடியாமல் பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் மாணவிக்கு பாலியல் தொல்லை, தற்கொலைக்கு தூண்டியதாக ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

    மாணவியின் உடல் கோவை அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. பள்ளி தலைமை ஆசிரியை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிலையில் இன்று காலை மாணவியின் தற்கொலைக்கு நீதி கேட்டு மாணவர்கள் கருப்பு சட்டை அணிந்து அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிணவறை முன்பு பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்கொலைக்கு நீதி வேண்டும், நீதி கிடைக்கும் வரை போராடுவோம் என்ற வாசங்கள் அடங்கிய பதாகைகளை வைத்து கொண்டு மாணவர்கள் கோ‌ஷங்களை எழுப்பினர். மாணவர்களின் போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை உருவானது.

    இதேபோல் கோட்டைமேடு, பெருமாள் கோவில் பகுதியில் மாணவியின் வீட்டின் முன்பு 200-க்கும் அதிகமானோர் கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    மாணவி தற்கொலை வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் கைதான ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி உடுமலைப்பேட்டையில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.
    கோவை:

    கோவையைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்நிலையில் இந்தப் பள்ளியில் தொடர்ந்து படிக்க தனக்கு விருப்பமில்லை. வேறு பள்ளியில் சேர்த்து விடுமாறு தனது பெற்றோரிடம் மாணவி கூறி உள்ளார். இதையடுத்து அவரை அவரது பெற்றோர் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் கடந்த செப்டம்பர் மாதம் சேர்த்தனர்.

    இந்தநிலையில் மாணவி கடந்த சில மாதங்களாக மிகுந்த மன உளைச்சலுடன் இருந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டுக்குத் திரும்பிய பெற்றோர் தங்களது மகள் தூக்கில் தொங்குவது கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு உக்கடம் போலீஸ் நிலையத்தில் இருந்து கோவை மேற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.

    போலீசார் நடத்திய விசாரணையில், மாணவி தற்கொலைக்கு முன்பு எழுதி வைத்த கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டதாகவும், அதில் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி (வயது 31) உள்பட 3 பேரின் பெயர்களை மாணவி குறிப்பிட்டு இருந்தது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் மாணவியின் செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் ஆசிரியர் மிதுன்சக்ரவர்த்தி மாணவியிடம் வாட்ஸ்அப்பில் ஆபாசமான முறையில் தொல்லை அளித்ததற்கான ஆதாரங்கள் மற்றும் அவருடன் பேசிய ஆடியோ ஆதாரங்களையும் போலீசார் கைப்பற்றினர்.

    கைது

    பின்னர் மாணவியின் தற்கொலைக்கு காரணமான ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியை போலீசார் நேற்று மாலை கைது  செய்தனர். 

    அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அவரை போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இரவு ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி ஆசிரியரை வருகிற 26-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியை உடுமலைப்பேட்டையில் உள்ள சிறையில் அடைத்தனர். 

    தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

    அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் மாணவியின் உடலை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள்  வாங்க மறுத்து விட்டனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது:-

    எங்களது மகளுக்கு ஆசிரியர் கொடுத்த பாலியல் தொல்லை குறித்து நாங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தோம். ஆனால் அவர் அந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அவரும் மாணவியின் தற்கொலைக்கு காரணமாக உள்ளார். அவரையும் போலீசார் கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    இதனையடுத்து மேற்கு அனைத்து மகளிர் போலீசார் பள்ளியின் தலைமை ஆசிரியையிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மாணவி தற்கொலை செய்வதற்கு முன்பு கடிதத்தில் குறிப்பிட்டு இருந்த அந்த 2 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கும் மாணவியின் தற்கொலைக்கும் காரணம் உள்ளதா? அவர்கள் மாணவிக்கு ஏதாவது தொல்லை கொடுத்தார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    ×