என் மலர்
நீங்கள் தேடியது "அவாமி லீக்"
- ஜன.11ம் தேதி ப்ரோலாய் சக்கி உயிரிழந்தார்.
- கிட்டத்தட்ட 18 மாதங்கள் சிறையில் கழித்த பின்னர் காலமானார்.
மூத்த அவாமி லீக் தலைவரும், முன்னாள் அமைச்சரும், கல்வியாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரமேஷ் சந்திர சென், 86, நேற்று (பிப்.8) இரவு நீதிமன்றக் காவலில் காலமானார். 2024 ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனா அரசு பதவி விலகிய பிறகு, அவர் மீது கொலை வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகள் சுமத்தப்பட்டு தினாஜ்பூர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
சிறையில் இருந்த அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, அவர் தினாஜ்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவருக்குத் தேவையான மருத்துவ சிகிச்சை மற்றும் ஜாமின் வழங்கப்படவில்லை என்று அவரது குடும்பத்தினரும் ஆதரவாளர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதற்கு முன்னதாக, கடந்த ஜனவரி 11-ம் தேதி, அவாமி லீக் கட்சியைச் சேர்ந்த மற்றொரு இந்துத் தலைவரும், இசைக் கலைஞருமான ப்ரோலாய் சக்கி என்பவரும் ராஜஷாஹி சிறைக் காவலில் இருந்தபோது உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிப்ரவரி 12-ம் தேதி வங்கதேசத்தில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தத் தொடர் மரணங்கள் சிறுபான்மையினர் மற்றும் அரசியல் கைதிகளின் பாதுகாப்பு குறித்த பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன.
- கட்சித் தலைவர்கள் பலர் மீது படுகொலை மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் உட்பட நூற்றுக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
- பல அவாமி லீக் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வங்காளதேச நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் 'அவாமி லீக்' கட்சியை, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடை செய்து தற்போதைய இடைக்கால அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையைப் பாதுகாப்பதற்காகவும் கட்சியின் தலைவர்களுக்கு எதிராக நடந்து வரும் விசாரணைகளில் ஈடுபட்டுள்ள சாட்சிகள் மற்றும் புகார்தாரர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் அவாமி லீக்கை தடை செய்யும் முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் விடுதலைக்கு முக்கிய பங்காற்றிய கட்சியின் செயல்பாடுகளை முடக்கியது சட்டவிரோதம் என அக்கட்சி தெரிவித்துள்ளது. 77 வயதான ஷேக் ஹசீனா கடந்த ஆண்டு பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவுக்கு தப்பிச் சென்றார். மாணவர் தலைமையிலான எழுச்சியைத் தொடர்ந்து, அவர் மற்றும் அவரது மூத்த கட்சித் தலைவர்கள் பலர் மீது படுகொலை மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் உட்பட நூற்றுக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பல அவாமி லீக் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலர் வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ளனர்.
1949 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அவாமி லீக், 1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானிடமிருந்து வங்காளதேசம் விடுதலை பெறுவதில் முக்கிய பங்கு வகித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- மாணவர் பிரிவு கொலை, சித்தரவதையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு.
- மாணவர்கள் போராட்டத்தின்போது பல்கலைக்கழகத்தில் நுழைந்து தாக்குதல் நடத்தியதால் வன்முறை வெடித்தது.
வங்கதேச நாட்டின் பிரதமராக இருந்தவர் ஷேக் ஹசீனா. இவருக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
இதனால் வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. இடைக்கால அரசு அமைந்ததும் ஷேக் ஹசீனாவுக்கு எதிராகவும், அவரது கட்சிக்கு எதிராகவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது.
ஷேக் ஹசீனா மற்றும் அவரது கட்சியை சேர்ந்த பல்வேறு தலைவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் ஷேக் ஹசீனா கட்சியின் மாணவர் பிரிவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற போராட்ட்தின்போது வன்முறை தாக்குதலில் மாணவர் பிரிவு ஈடுபட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இடைக்கால அரசு தெரிவித்தள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் மாளிகை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால், வலுக்கட்டாயமாக வங்கதேசத்தில் இருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. வெளியேறுவதற்கு முன் கடைசியாக ஒருமுறை உரை நிகழ்த்த விரும்பினார். ஆனால், ராணுவம் அவருக்கு 45 நிமிடம் கால அவகாசம் கொடுத்து பாதுகாப்பாக வெளியேற்றியது.
ஷேக் ஹசீனாவின் வங்கதேசம் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவு வங்கதேசம் சத்ரா லீக் என்ற பெயரில் இயங்கி வந்தது. போராட்டத்தின்போது கொலைகள், துன்புறுத்தல், சித்திரவதையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மாணவர்கள் போராட்டம் ஜூலை மாதம் அமைதியாக நடைபெற்றது. சத்ரா லீக் உறுப்பினர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் நுழைந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். அதன்பின் வன்முறை வெடித்தது குறிப்பிடத்தக்கது.






