search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அம்பேத்கார் சிலை"

    • அம்பேத்கர் சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் தலைமை கழக செயலாளர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்கள்.
    • கழகத்தின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு, கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 133-வது பிறந்த நாளான வருகிற 14-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணியளவில் சென்னை ஆற்காடு சாலையில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் தலைமை கழக செயலாளர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்கள்.

    இதில் மாவட்ட கழக செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், சார்பு அணிகளின் மாநில நிர்வாகிகள், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். மன்றம், இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற் சங்கம் மற்றும் கலைப்பிரிவு உள்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு, கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×