search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் உத்தரவு"

    • ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியனில் நடைபெறும் வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
    • அமைச்சர் பெரியசாமி, துறை அலுவலர்களுடன் ஆய்வு செய்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியன் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளின் முன்னேற்றம் குறித்து அமைச்சர் பெரியசாமி துறை அலுவலர்களுடன் ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில், திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது.

    அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் மூலம் கிராம ஊராட்சிகளில் உள்ள அனைத்து குக்கிராமங்களி லும் கான்கிரீட் சாலை, தெருவிளக்குகள், குளம், இடுகாடு, சுடுகாடு, குடிநீர், விளையாட்டு, கிராம அங்காடிகள், நூலகங்கள் என பல்வேறு அடிப்படை கட்டமைப்புப் பணிகளை அந்தந்த ஊராட்சிகளே செய்வதற்காக ஆண்டிற்கு சுமார் ரூ.1,400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    ஊரகப்பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் நடை பெற்று வரும் வளர்ச்சி பணிகளின் முன்னேற்றம் மற்றும் தரம் குறித்து தொடர்ச்சியான பல்வேறு கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடிப்படை வசதிகள் மேம்படுத்தும் பணிகளை அனைத்து அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிடோர் ஒருங்கிணைந்து செய்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியன் விழுப்பனூர் ஊராட்சி, கிருஷ்ணன் கோவில் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.5.32லட்சம் மதிப்பில் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் பணிகளையும், திருவண்ணா மலை ஊராட்சி என்.சண் முகசுந்தராபுரம் கிராமத்தில் முதல்வரின் கிராம சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.20லட்சம் மதிப்பில் சாலை அமைப்பதற்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தையும் அமைச்சர் பார்வையிட்டார்.

    மல்லி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் நாற்றங்கால் பண்ணை மற்றும் மியா வாக்கி முறையில் மரக்கன்றுகள் நடப்பட்டு வரும் பணிகளையும், ராம கிருஷ்ணாபுரத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மூலம் ரூ.9.78லட்சம் மதிப்பில் கிழக்கு ஊரணியை ஆழப்படுத்தி தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நடை பெற்று வருவதையும் அமைச்சர் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அதன்பிறகு ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் பெரியசாமியை கலெக்டர் ஜெயசீலன் வரவேற்றார். இந்தகூட்டத்தில் திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) தண்ட பாணி, செயற்பொறியாளர் இந்துமதி, ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி தலைவர் ரவிக் கண்ணன், யூனியன் தலைவர் ஆறுமுகம், வத்திராயிருப்பு யூனியன் தலைவர் சிந்துமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×