search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அப்பலாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரசாமி கோவில்"

    • உற்சவ மூர்த்திகள் வீதி உலா வந்தனர்.
    • 14 வகையான பூக்கள் மற்றும் இலைகள் பயன்படுத்தப்பட்டன.

    திருப்பதி மாவட்டம் அப்பலாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த மே மாதம் 31-ந்தேதியில் இருந்து ஜூன் மாதம் 8-ந்தேதி வரை நடந்தது. கோவிலில் நடந்த நித்ய கைங்கர்யங்கள், பிரம்மோற்சவ விழாவில் அர்ச்சகர்கள், அதிகாரிகள், பக்தர்கள் தெரிந்தும், தெரியாமலும் செய்த தவறுகளால் ஏற்பட்ட தோஷ நிவர்த்திக்காக நேற்று கோவிலில் புஷ்ப யாகம் நடத்தப்பட்டது.

    உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, பிரசன்ன வெங்கடேஸ்வரருக்கு பால், தயிர், தேன், சந்தனம், இளநீர் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. புஷ்ப யாகத்துக்கு பயன்படுத்தப்பட்ட மலர்கள் கோவிலில் உள்ள மூலமூர்த்தியிடம் வைத்து சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டது.

    அதன் பிறகு மலர் கூடைகளை கோவிலின் நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக பிரத்யேக மேடைக்கு எடுத்து வந்தனர். உற்சவ மூர்த்திகளும் வீதி உலா வந்தனர். மதியம் அர்ச்சகர்கள் வேத மந்திரங்களை ஓத மற்றும் மங்கள வாத்தியங்கள் இசைக்க புஷ்ப யாகம் நடந்தது.

    அதில் துளசி, சாமந்தி, கன்னேறு, மொகலி, சம்பங்கி, ரோஜா என 14 வகையான பூக்கள் மற்றும் இலைகள் பயன்படுத்தப்பட்டன. அதன்பிறகு கோவிலின் நான்கு மாட வீதிகளில் பெரிய சேஷ வாகனத்தில் உற்சவர்கள் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    • இரவு பெரிய சேஷ வாகன வீதிஉலா நடந்தது.
    • திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பதியை அடுத்த அப்பலாயகுண்டாவில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. அதையொட்டி மிதுன லக்னத்தில் காலை 7 மணியில் இருந்து 7.30 மணிக்குள் கொடிமரத்தில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றப்பட்டது.

    பின்னர் காலை 8.30 மணியில் இருந்து காலை 9.30 மணி வரை ஸ்நாபன திருமஞ்சனமும், மாலை ஊஞ்சல் சேவையும் நடந்தது. இரவு பெரிய சேஷ வாகன வீதிஉலா நடந்தது. அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    மேற்கண்ட நிகழ்ச்சியில் கோவில் துணை அதிகாரி கோவிந்தராஜன், உதவி அதிகாரி பிரபாகர்ரெட்டி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • பிரம்மோற்சவ விழா இன்று தொடங்கி 9 நாட்கள் நடக்கிறது.
    • 9 நாட்களும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

    திருப்பதியை அடுத்த அப்பலாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா இன்று (புதன்கிழமை) தொடங்கி 9 நாட்கள் நடக்கிறது. அதையொட்டி நேற்று மாலை 6 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை சாஸ்திர பூர்வமாக மேதினி பூஜை, சேனாதிபதி உற்சவம், அங்குரார்ப்பணம் நடந்தது.

    பிரம்மோற்சவ விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. சாளுவப் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. ரங்கோலி கோலம் வரையப்பட்டுள்ளது. பக்தர்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

    இன்று (புதன்கிழமை) காலை கொடியேற்றம், இரவு பெரிய சேஷ வாகன வீதிஉலா, நாளை (வியாழக்கிழமை) காலை சின்ன சேஷ வாகன வீதிஉலா, இரவு ஹம்ச வாகன வீதிஉலா, 2-ந்தேதி காலை சிம்ம வாகன வீதிஉலா, இரவு முத்துப்பந்தல் வாகன வீதிஉலா, 3-ந்தேதி காலை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, மாலை கல்யாணோற்சவம், இரவு சர்வ பூபால வாகன வீதிஉலா.

    4-ந்தேதி காலை மோகினி அவதாரத்தில் பல்லக்கு வாகன வீதிஉலா, இரவு கருட வாகன வீதிஉலா, 5-ந்தேதி காலை அனுமந்த வாகன வீதிஉலா, இரவு யானை வாகன வீதிஉலா, 6-ந்தேதி காலை சூரிய பிரபை வாகன வீதிஉலா, இரவு சந்திர பிரபை வாகன வீதிஉலா, 7-ந்தேதி காலை தேரோட்டம், இரவு குதிரை வாகன வீதிஉலா, 8-ந்தேதி காலை சக்கர ஸ்நானம், இரவு கொடியிறக்கம் நடக்கிறது.

    மேற்கண்ட வாகனங்களில் உற்சவர் பிரசன்ன வெங்கடேஸ்வரசாமி தனித்தும், உபயநாச்சியார்களுடன் இணைந்தும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் தினமும் காலை 8 மணியில் இருந்து காலை 9 மணி வரையிலும், இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரையிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். 9 நாட்களும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

    ×