search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனைத்து கட்சியினர்"

    • பஸ் நிலையத்தை எம்.புதூருக்கு மாற்றுவதற்கு மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை திரும்ப பெற வேண்டும்.
    • அனைத்து கட்சிகள் மற்றும் அமைப்புகளின் சார்பில் கடலூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கடலூர்:

    கடலூர் மாநகர புதிய பஸ் நிலையம் செல்வதற்கு அதிக தூரம் இருப்பதால் பஸ் நிலையத்தை எம்.புதூருக்கு மாற்றுவதற்கு மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்ட திருமணத்தை திரும்ப பெற வேண்டும். கடலூர் மாநகராட்சிக்கு அளித்துள்ள வல்லுனர் குழு அறிக்கை தவறான தகவலை கொடுப்பதால் திரும்ப பெற வேண்டும். கொண்டங்கி ஏரி அருகில் பஸ் நிலையம் அமைத்ததால் சுற்றுச்சூழல் மாசுபடும். கலெக்டர் அலுவலகம் அருகே வெள்ள அபாய பகுதி என கூறி பஸ் நிலையம் அமைப்பதை தடுக்க கூடாது.

    புதிய பஸ் நிலையம் அமைக்க பொருத்தமான இடம் கிடைக்கும் வரை தற்போது உள்ள பஸ் நிலையத்தை நவீனப்படுத்திட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து கட்சிகள் மற்றும் அமைப்புகளின் சார்பில் கடலூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மாதவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணை செயலாளர் குளோப், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் திலகர், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ரஹீம், அனைத்து குடியிருப்போர் சங்க பொதுச் செயலாளர் மருதவாணன், தலைவர் வெங்கடேசன், மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் பாலு, மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் மன்சூர், அனைத்து பொது நல அமைப்புகளின் செயலாளர் ரவி, பொது நல அமைப்பு தலைவர் திருவரசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர செயலாளர் அமர்நாத் மாவட்ட குழு உறுப்பினர் பக்கிரான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் நாகராஜ், எழுத்தாளர் சங்க மாவட்ட செயலாளர் பால்கி, தமிழ்நாடு மீனவர் பேரமைப்பு தலைவர் சுப்புராயன், தனியார் பஸ் பேருந்து தொழிலாளர் சங்க தலைவர் குரு ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். முன்னதாக தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    ×